ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு புதிய பெயர்


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு புதிய பெயர்
x
தினத்தந்தி 4 Dec 2018 9:15 PM GMT (Updated: 4 Dec 2018 8:54 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை நடந்துள்ள 11 தொடர்களிலும் பங்கேற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறாத ஒரே அணி டெல்லி டேர்டெவில்ஸ் தான்.

புதுடெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை நடந்துள்ள 11 தொடர்களிலும் பங்கேற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறாத ஒரே அணி டெல்லி டேர்டெவில்ஸ் தான். அதுவும் கடந்த 6 சீசன்களில் லீக் சுற்றை தாண்டவில்லை. இந்த நிலையில் அந்த அணியின் பெயரை மாற்ற அணி நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி அந்த அணிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் என்று பெயர் மாற்றப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சியில் டெல்லி அணியின் புதிய சீருடையும் அறிமுகம் செய்யப்பட்டது. டெல்லி அணிக்கு 11 ஆண்டுகளுக்கு பிறகு ஷிகர் தவான் திரும்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story