கிரிக்கெட்

தெண்டுல்கர் விமர்சனத்துக்கு லாங்கர் பதில் + "||" + The Tendulkar Criticism Longer answer

தெண்டுல்கர் விமர்சனத்துக்கு லாங்கர் பதில்

தெண்டுல்கர் விமர்சனத்துக்கு லாங்கர் பதில்
இந்த டெஸ்டில் 2-வது நாள் ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் ஆமை வேகத்தில் இருந்தது.
ந்த டெஸ்டில் 2-வது நாள் ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் ஆமை வேகத்தில் இருந்தது. இதை விமர்சித்த இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், ‘சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இப்படியொரு தடுப்பாட்ட மனநிலையுடன் ஆடியதை இதற்கு முன்பு நான் பார்த்ததில்லை’ என்று கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், ‘தெண்டுல்கர், ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் மோதத் தொடங்கிய காலக்கட்டத்தில் ஆலன்பார்டர், டேவிட் பூன் போன்ற சிறந்த வீரர்கள் இருந்தனர். அதன் பிறகு ஸ்டீவ் வாக், மார்க் வாக், ரிக்கிபாண்டிங் உள்ளிட்டோரை களத்தில் சந்தித்தார். இவர்கள் எல்லாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகுந்த அனுபவம் பெற்றிருந்தனர். இவர்களுக்கு தங்களது ஆட்டம் என்ன? என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது தெரியும். அதற்கு ஏற்ப விளையாடினார்கள். ஆனால் இப்போது நிலைமை வேறு. தற்போதைய ஆஸ்திரேலிய அணியில் பேட்ஸ்மேன்களுக்கு போதிய அனுபவம் கிடையாது. அவர்கள் முடிந்த வரை போராடுகிறார்கள். வேகமாக ரன்கள் எடுக்க விரும்பினாலும், ஆடுகளம் கடினமாக உள்ளது. அவுட் பீல்டும் மெதுவாக காணப்படுகிறது. அது மட்டுமின்றி இந்திய பவுலர்களும் உண்மையிலேயே நன்றாக பந்து வீசி நெருக்கடி கொடுக்கிறார்கள்’ என்றார்.

விக்கெட் விழுந்ததும் இந்திய கேப்டன் விராட் கோலி ஆக்ரோஷமாக கத்தியபடி ஓடிவந்து மகிழ்ச்சியை கொண்டாடுவது குறித்து கேட்ட போது, ‘இந்த மாதிரி அதீத ஆர்வமுடன் கொண்டாடுவதை அவர் விரும்புகிறார். ஆனால் நாங்கள் அவரை போன்று செய்தால், உலகத்திலேயே மோசமான மனிதர்கள் என்று சொல்வார்கள். இருப்பினும் நானும் அதை ரசிக்கிறேன்’ என்றார்.