பிக்பாஷ் கிரிக்கெட்டில் ‘டாஸ்’ போடுவதில் புதிய முறை அறிமுகம்


பிக்பாஷ் கிரிக்கெட்டில் ‘டாஸ்’ போடுவதில் புதிய முறை அறிமுகம்
x
தினத்தந்தி 11 Dec 2018 10:00 PM GMT (Updated: 11 Dec 2018 7:32 PM GMT)

பிக்பாஷ் கிரிக்கெட்டில் டாஸ் போடுவதில் புதிய முறையாக, நாணயத்துக்கு பதிலாக பேட்டை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படும் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 8-வது சீசன் வருகிற 19-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இந்த கிரிக்கெட் தொடரில் புதிய முறை ஒன்று புகுத்தப்படுகிறது. வழக்கமாக யார் முதலில் பேட்டிங் அல்லது பந்து வீச்சை தேர்வு செய்வது என்பதை முடிவு செய்ய, நாணயத்தை மேலே சுண்டி விட்டு (டாஸ்), பூவா-தலையா கேட்பார்கள். இதை சரியாக சொல்லும் அணியின் கேப்டன் பேட்டிங்-பந்து வீச்சை தீர்மானிப்பார்.

ஆனால் இந்த தொடரில் நாணயத்தை வைத்து ‘டாஸ்’ போடுதல் நீக்கப்பட்டு, பேட்டை மேலே தூக்கி போட்டு முடிவு செய்ய இருக்கிறார்கள். அதாவது பேட்டின் அடிப்பாகம் மற்றும் மேல்பாகம் இவற்றில் எது முதலில் தரையில் படுகிறதோ அதன் அடிப்படையில் முடிவு செய்யப்படும். இதற்காக பிரத்யேகமான பேட் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.



Next Story