கிரிக்கெட்

ஆஸ்திரேலிய அணி கேப்டனை விராட் கோலி அவமதித்து விட்டார் - மிச்செல் ஜான்சன் + "||" + Former Australian pacer Mitchell Johnson lashes out at Virat Kohli, calls him ‘silly and disrespectful’

ஆஸ்திரேலிய அணி கேப்டனை விராட் கோலி அவமதித்து விட்டார் - மிச்செல் ஜான்சன்

ஆஸ்திரேலிய அணி கேப்டனை விராட் கோலி அவமதித்து விட்டார் - மிச்செல் ஜான்சன்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் டிம் பெயினை, விராட் கோலி அவமதித்து விட்டதாக முன்னாள் வீரர் மிச்செல் ஜான்சன் கடுமையாக சாடியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலிக்கும், டிம் பெயினுக்கும் இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டது. இதுகுறித்து பேசியுள்ள மிச்செல் ஜான்சன், போட்டி முடிந்ததும் ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெயினுடன் கை குலுக்கிய விராட் கோலி, அவரது கண்களை பார்ப்பதை தவிர்த்து விட்டதாகக் கூறியுள்ளார்.

தன்னை பொருத்தவரை இது அவமரியாதையான செயல் என்று மிச்செல் ஜான்சன் சாடியுள்ளார். தலைசிறந்த வீரராக விராட் கோலி இருந்தாலும், இந்த டெஸ்ட் போட்டியின் மூலம் வேடிக்கையானவராக அவர் மாறி இருப்பதாகவும் ஜான்சன் விமர்சித்துள்ளார்.

ஏற்கனவே இது குறித்து பாலிவுட் நடிகர் நசிருதீன் ஷா  விமர்சித்து இருந்தார் . 

விராட் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்ல. அவர் உலகின் மோசமான நடத்தை கொண்ட வீரரும் ஆவார். விராட் கோலியின் திறமையான கிரிக்கெட் என்பது அவரது அகந்தை மற்றும் கெட்ட நடத்தையால் மங்குகின்றது என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.