கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள், 20 ஓவர் கிரிக்கெட் தொடர்: இந்திய பெண்கள் அணி அறிவிப்பு + "||" + One day against New Zealand, 20 Over cricket Series: Indian women's team announcement

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள், 20 ஓவர் கிரிக்கெட் தொடர்: இந்திய பெண்கள் அணி அறிவிப்பு

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள், 20 ஓவர் கிரிக்கெட் தொடர்: இந்திய பெண்கள் அணி அறிவிப்பு
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஜனவரி 24–ந் தேதி முதல் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது.

புதுடெல்லி, 

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஜனவரி 24–ந் தேதி முதல் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது. நியூசிலாந்து போட்டி தொடருக்காக இந்திய ஒருநாள் மற்றும் 20 ஓவர் பெண்கள் கிரிக்கெட் அணி டெல்லியில் தேர்வு செய்து நேற்று அறிவிக்கப்பட்டது. ஒருநாள் போட்டி அணியில் இருந்து வேதா கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மோனா மிஷ்ராம் சேர்க்கப்பட்டுள்ளார். டெல்லியை சேர்ந்த 22 வயதான தொடக்க வீராங்கனை பிரியா பூனியா 20 ஓவர் போட்டிக்கான அணியில் அறிமுக வீராங்கனையாக இடம் பிடித்துள்ளார். ஷிகா பாண்டே மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார். ஒருநாள் போட்டி அணிக்கு மிதாலி ராஜூம், 20 ஓவர் போட்டி அணிக்கு ஹர்மன்பிரீத் கவுரும் கேப்டனாக நீடிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பெண்கள் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த டபிள்யூ.வி.ராமன், நியூசிலாந்து தொடரில் இருந்து தனது பணியை தொடங்க இருக்கிறார்.

நியூசிலாந்து தொடருக்கான இந்திய பெண்கள் ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் அணிகள் வருமாறு:–

ஒருநாள் அணி: மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்பிரீத் கவுர் (துணை கேப்டன்), மந்தனா, பூனம் ராத், தீப்தி ‌ஷர்மா, தயாளன் ஹேமலதா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மோனா மிஷ்ராம், தானியா பாத்யா, எக்தா பிஸ்த், பூனம் யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட், ஜூலன் கோஸ்வாமி, மான்சி ஜோஷி, ஷிஹா பாண்டே.

20 ஓவர் அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), மந்தனா (துணை கேப்டன்), மிதாலி ராஜ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ‌ஷர்மா, தானியா பாத்யா, பூனம் யாதவ், ராதா யாதவ், அனுஜா பட்டீல், எக்தா பிஸ்த், தயாளன் ஹேமலதா, மான்சி ஜோஷி, அருந்ததி ரெட்டி, பிரியா பூனியா, ஷிஹா பாண்டே.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. இதுவரை 10 ஆட்டங்களில் ஆடியுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 வெற்றி, 4 தோல்வியுடன் மொத்தம் 12 புள்ளிகள் பெற்று இருக்கிறது.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணியை சாய்த்தது ராஜஸ்தான்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஜெய்ப்பூரில் நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாய்த்தது.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்
இடம்: ஐதராபாத், நேரம்: மாலை 4 மணிவில்லியம்
4. வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு தயாராகுவதற்கு 7 இந்திய வீரர்கள் கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்பு
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்தியாவை சேர்ந்த 7 வீரர்கள் கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்க உள்ளனர்.
5. திருமணம் செய்து கொண்ட கிரிக்கெட் வீராங்கனைகள்
நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்–ரவுண்டர் ஹாலெ ஜென்சன்.