ஐ.சி.சி. முடிவுக்கு தெண்டுல்கர் அதிருப்தி


ஐ.சி.சி. முடிவுக்கு தெண்டுல்கர் அதிருப்தி
x
தினத்தந்தி 23 Dec 2018 9:15 PM GMT (Updated: 23 Dec 2018 8:44 PM GMT)

ஒவ்வொரு டெஸ்ட் போட்டி முடிந்ததும் அந்த ஆடுகளத்தன்மை எப்படி இருந்தது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சொல்வது வழக்கம்.

மும்பை, 

ஒவ்வொரு டெஸ்ட் போட்டி முடிந்ததும் அந்த ஆடுகளத்தன்மை எப்படி இருந்தது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சொல்வது வழக்கம். இதன்படி இந்தியா–ஆஸ்திரேலியா இடையே 2–வது டெஸ்ட் நடந்த பெர்த் ஆடுகளம் குறித்து பெரிய அளவில் திருப்தி அடையாத ஐ.சி.சி., ‘சராசரியான ஆடுகளம்’ என்று கூறியது. இதற்கு இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுகளங்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. டெஸ்ட் கிரிக்கெட்டை மேம்படுத்தவும், சுவாரஸ்யத்தை உருவாக்கவும் பெர்த் போன்ற ஆடுகளங்கள் தான் தேவையாகும். பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்களின் உண்மையான திறமையை சோதித்து பார்க்கக்கூடிய ஆடுகளமாக அது அமைந்தது. அதனால் இதை சராசரி ஆடுகளம் என்று சொல்வது சரி அல்ல’ என்றார்.


Next Story