கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு + "||" + One-day cricket against India: Australian team announcement

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

சிட்னி,

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி

இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி தொடர் முடிந்த பிறகு 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இரு அணிகளும் மோதுகின்றன. இதில் முதலாவது ஒருநாள் போட்டி வருகிற 12–ந் தேதி சிட்னியிலும், 2–வது போட்டி 15–ந் தேதி அடிலெய்டிலும், 3–வது மற்றும் கடைசி போட்டி 18–ந் தேதி மெல்போர்னிலும் நடக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான 14 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை, அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. 34 வயது வேகப்பந்து வீச்சாளரான பீட்டர் சிடில் 2010–ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக ஒருநாள் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார். உஸ்மான் கவாஜா, சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஆகியோர் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள்.

ஆஸ்திரேலிய அணி வீரர்கள்

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கு மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் காரி ஆகிய இருவரும் துணை கேப்டன்களாக நீடிக்கின்றனர். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை கவனத்தில் கொண்டு மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ் ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மோசமான பார்ம் காரணமாக டிராவிஸ் ஹெட், டார்சி ஷார்ட், கிறிஸ் லின் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். முதுகுவலி காரணமாக வேகப்பந்து வீச்சாளர் நாதன் கவுல்டர் நிலே பெயர் அணி தேர்வில் பரிசீலனை செய்யப்படவில்லை.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான ஆஸ்திரேலிய அணி வீரர்கள் வருமாறு:–

ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் காரி (விக்கெட் கீப்பர்), ரிச்சர்ட்சன், பில்லி ஸ்டான்லேக், ஜாசன் பெரென்டோர்ப், பீட்டர் சிடில், நாதன் லயன், ஆடம் ஜம்பா.