கிரிக்கெட்

ஆமதாபாத்தில் பிரமாண்டமான கிரிக்கெட் ஸ்டேடியம் + "||" + Largest cricket stadium in Ahmedabad

ஆமதாபாத்தில் பிரமாண்டமான கிரிக்கெட் ஸ்டேடியம்

ஆமதாபாத்தில் பிரமாண்டமான கிரிக்கெட் ஸ்டேடியம்
ஆமதாபாத்தில் பிரமாண்டமான கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்படுகிறது.
ஆமதாபாத்,

குஜராத் கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆமதாபாத்தில் பிரமாண்டமான கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்படுகிறது. 63 ஏக்கம் நிலப்பரப்பில் அமையும் இந்த ஸ்டேடியத்தில் உள்விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம், 3 பயிற்சி மைதானம் உள்பட பல்வேறு நவீன வசதிகள் இடம் பெறுகின்றன. ரூ.700 கோடி செலவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள இந்த ஸ்டேடியத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கை வசதிகள் அமைக்கப்படுகிறது. இந்த ஸ்டேடியம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற பெருமையை பெற இருக்கிறது. இந்த ஸ்டேடியத்துக்கான கட்டுமான பணிகள் தொடங்கி விட்டன என்று குஜராத் கிரிக்கெட் சங்க டுவிட்டரில் தகவல் வெளியாகி இருக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆமதாபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஆமதாபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.