கிரிக்கெட்

டெஸ்ட் போட்டி தொடர் முடிவு: கும்பிளேவின் கணிப்பு பலித்தது + "||" + Test results of the tournament: The prediction was fulfilled kumpile

டெஸ்ட் போட்டி தொடர் முடிவு: கும்பிளேவின் கணிப்பு பலித்தது

டெஸ்ட் போட்டி தொடர் முடிவு: கும்பிளேவின் கணிப்பு பலித்தது
டெஸ்ட் போட்டி தொடர் முடிவை முன்னதாக கூறிய கும்பிளேவின் கணிப்பு பலித்ததுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டி தொடருக்கு முன்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்பிளேவிடம் கிரிக்கெட் இணையதளம் ஒன்று இந்த போட்டி தொடர் முடிவு எப்படி? இருக்கும் என்று கேள்வி எழுப்பியது. அதற்கு இந்திய அணி டெஸ்ட் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என்று தெரிவித்து இருந்தார். அத்துடன் மழையால் போட்டி எதுவும் பாதிக்கப்படுமா? என்று வினவியதற்கு மழை காலம் என்பதால் போட்டி பாதிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியிருந்தார். அவர் கணித்து சொன்ன மாதிரியே போட்டி தொடர் முடிவு மட்டுமின்றி, மழையால் ஒரு டெஸ்ட் (சிட்னி டெஸ்ட்) போட்டியும் பாதித்தது. இதனால் கும்பிளேவின் கணிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் கும்பிளேவை பாராட்டி உள்ளனர்.

இதற்கு நேர் மாறாக இந்த போட்டி தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கணித்து கூறியது பொய்த்து போனது. அவர் ஆஸ்திரேலிய அணி 2-1 என்று தொடரை வெல்லும் என்றும், விராட்கோலியை விட ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா அதிக ரன் குவிப்பார் என்று ஆருடம் தெரிவித்து இருந்தார். அவர் கூறிய இரண்டு விஷயமும் பலிக்கவில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. அடிலெய்டு டெஸ்ட்; இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
2. அடிலெய்டு டெஸ்ட்; உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 186/6 (83 ஓவர்கள்)
அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா உணவு இடைவேளை வரை 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்துள்ளது.
3. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: வெற்றி இலக்கு 323; ஆஸ்திரேலியா 152/5 (69 ஓவர்கள்)
ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 69வது ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்துள்ளது.
4. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: வெற்றி இலக்கு 323; ஆஸ்திரேலியா 62/3 (25 ஓவர்கள்)
ஆஸ்திரேலியா 323 என்ற வெற்றி இலக்குடன் 4வது நாளில் 2வது இன்னிங்சை விளையாடி வருகிறது.
5. 2வது டெஸ்ட் போட்டி: 2வது நாளில் இந்தியா 117/3; பிரித்வி ஷா அரை சதம்
2வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா அரை சதம் எடுத்துள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை