கிரிக்கெட்

”போட்டி முடிந்ததும் ஊருக்கு போயிறாத, வீட்டுக்கு வந்து என் குழந்தைகளை பாத்துக்கோ” ரிஷப் பண்டிற்கு ஆஸி கேப்டன் மனைவி அழைப்பு + "||" + Tim Paine's wife asks for Rishabh Pant's availability to babysit her kids

”போட்டி முடிந்ததும் ஊருக்கு போயிறாத, வீட்டுக்கு வந்து என் குழந்தைகளை பாத்துக்கோ” ரிஷப் பண்டிற்கு ஆஸி கேப்டன் மனைவி அழைப்பு

”போட்டி முடிந்ததும் ஊருக்கு போயிறாத, வீட்டுக்கு வந்து என் குழந்தைகளை பாத்துக்கோ” ரிஷப் பண்டிற்கு ஆஸி கேப்டன் மனைவி அழைப்பு
இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்டிற்கு நேரமிருந்தால் குழந்தைகளை பார்த்துக்கொள்ள வருமாறு ஆஸ்திரேலிய கேப்டனின் மனைவி இன்ஸ்டாகிராமில் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.

போட்டியின் போது “போட்டி முடிந்ததும் ஊருக்கு போயிறாத, வீட்டுக்கு வந்து என் குழந்தைகளை பாத்துக்கோ, நானும் என் மனைவியும் படத்துக்கு போயிட்டு வருகிறோம்.” என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன், ரிஷப் பண்டை கலாய்த்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, டிம் பெய்ன் ஒரு தற்காலிக கேப்டன் எனக்கூறி ரிஷப் பண்ட் கிண்டலடித்தார்.

இது பெரும் சர்ச்சையானதை அடுத்து ரிஷப் பண்டிற்கு அபராதம் விதித்து ஐசிசி நடவடிக்கைக்கு மேற்கொண்டது. இதற்கிடையில் ஆஸ்திரேலிய பிரதமர் உடனான சந்திப்பின் போது, ரிஷப் பண்ட் மற்றும் தன்னுடைய குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை எடுத்து டிம் பெய்னின் மனைவி போனி பெய்ன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இது இணையம் முழுவதும் வைரலாகி, வெறும் 500 பாலோவர்களை கொண்டிருந்த போனி பெய்னிற்கு சுமார் 36000 பாலோவர்களை கொண்டு வந்து சேர்த்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் குழந்தைகளை பார்த்து கொள்ள வீட்டிற்கு வருமாறு போனி பெய்ன், ரிஷப் பண்டிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கான இந்திய அணி அறிவிப்பு -தமிழக வீரர்கள் விஜய்சங்கர், தினேஷ் கார்த்திக் சேர்ப்பு
உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக வீரர்கள் விஜய்சங்கர், தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
2. விமான நிலையத்தில் தூங்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஐபிஎல் டைமிங்கை சூசகமாக சுட்டிக் காட்டிய டோனி
ஐபிஎல் டைமிங்கை சூசகமாக சுட்டிக் காட்டி டோனி தான் தூங்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார் டோனி.
3. பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தால் உலக கோப்பையை வெல்ல முடியாது -பாகிஸ்தான் வீரர்களுக்கு வாசிம் அக்ரம் அறிவுரை
பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தால் உலகக் கோப்பையை வெல்ல முடியாது என வாசிம் அக்ரம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை விளாசி உள்ளார்.
4. தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை விபத்தில் மரணம்
தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை விபத்தில் குழந்தையுடன் மரணம் அடைந்தார்.
5. பட்லரை ரன் அவுட் செய்த விவகாரம்: நான் விதிகளை மீறவில்லை - அஸ்வின் விளக்கம்
பட்லரை ரன் அவுட் செய்த விவகாரத்தில் நான் விதிகளை மீறவில்லை என அஸ்வின் விளக்கம் அளித்து உள்ளார்.