ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்து டோனி சாதனை


ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்து டோனி சாதனை
x
தினத்தந்தி 12 Jan 2019 7:41 AM GMT (Updated: 12 Jan 2019 7:41 AM GMT)

ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 5-வது வீரர் மகேந்திர சிங் டோனி என்ற பெருமையை பெற்றார்.

சிட்னி

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே நடந்த 20 ஓவர் போட்டித் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அதைத் தொடர்ந்து நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் சொந்தமாக்கி புதிய வரலாறு படைத்தது

அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று  நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசியது. 

கேப்டன் ஆரோன் பிஞ்ச் (6 ரன்கள்) புவனேஷ்குமார் பந்தில் கிளீன் போல்டு ஆனார். ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த போதிலும், கணிசமாக ரன்களையும் சேர்க்கத் தவறவில்லை. அந்த அணியில் உஸ்மான் காவ்ஜா ( 59 ரன்கள்), ஷான் மார்ஷ் (54 ரன்கள்), ஹேண்ட்ஸ்கோம்ப் ( 73 ரன்கள்)  என பொறுப்பான முறையில் ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தனர்.  மார்கஸ் ஸ்டாயின்ஸ் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்களை சேர்த்துள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்கு 289 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தரப்பில், புவனேஷ் குமார், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து களம் இறங்கிய இந்திய  அணி  10.3 ஓவரில் 22 ரன்களுக்கு  3 விக்கெட்டுகளை இழந்தது.  டோனி இந்த போட்டியில்  10 ஆயிரம் ரன்களை கடந்தார். ஒருநாள் போட்டிகளில்  10 ஆயிரம் ரன்களை கடந்த 5 வது வீரர் டோனி ஆவார்.  இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர், கங்குலி, டிராவிட், கோலி ஆகியோர் கடந்து  உள்ளனர்.

Next Story