ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; சதம் கடந்து ரோகித் சர்மா அசத்தல்


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; சதம் கடந்து ரோகித் சர்மா அசத்தல்
x
தினத்தந்தி 12 Jan 2019 10:17 AM GMT (Updated: 12 Jan 2019 10:17 AM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா சதம் கடந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.  இவ்விரு அணிகள் இடையே நடந்த 20 ஓவர் போட்டி தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அதை தொடர்ந்து நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் சொந்தமாக்கி புதிய வரலாறு படைத்தது.

இந்த நிலையில், இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி நடந்தது.  இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசியது. 

ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்களை சேர்த்துள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்கு 289 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்திய அணி விளையாடியது.  இதில் ஒரு புறம் தோனி (51) தவிர மற்றவர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய ரோகித் சர்மா நிலைத்து நின்று ஆடினார்.  அவர் சதம் அடித்து அசத்தியுள்ளார்.  ரோகித் 133 ரன்கள் (129 பந்துகள் 10 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து உள்ளார்.

Next Story