கிரிக்கெட்

இணையதளத்தில் காதலியை அறிமுகம் செய்த ரிஷாப் பான்ட் + "||" + Rishab Bant introduced the lover to the website

இணையதளத்தில் காதலியை அறிமுகம் செய்த ரிஷாப் பான்ட்

இணையதளத்தில் காதலியை அறிமுகம் செய்த ரிஷாப் பான்ட்
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் இணைய தளத்தில் இளம் பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
இளம் பெண்ணின் பெயர் இஷா என்றும் அவர் ரிஷாப் பான்ட்டின் காதலி என்றும் தெரியவந்துள்ளது. 

ரிஷாப் பான்ட் தனது பதிவில் ‘நான் உன்னை மகிழ்ச்சியாக வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனெனில் நான் மகிழ்ச்சியாக இருக்க நீ தான் காரணம்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் அந்த இளம் பெண்ணும் அதே படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ‘என்னுடையவர், என் ஆத்மா, எனது சிறந்த நண்பர், எனது வாழ்க்கையின் காதலர்’ என்று பதிவிட்டுள்ளார்.