கிரிக்கெட்

மாநில பள்ளி 20 ஓவர் கிரிக்கெட்: சாந்தோம், செயின்ட் பீட்ஸ் அரைஇறுதிக்கு தகுதி + "||" + State school 20 overs cricket Qualifying for the semi-final

மாநில பள்ளி 20 ஓவர் கிரிக்கெட்: சாந்தோம், செயின்ட் பீட்ஸ் அரைஇறுதிக்கு தகுதி

மாநில பள்ளி 20 ஓவர் கிரிக்கெட்: சாந்தோம், செயின்ட் பீட்ஸ் அரைஇறுதிக்கு தகுதி
நெல்லையை அடுத்த சங்கர்நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில், பள்ளிகளுக்கு இடையே மாநில அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.
நெல்லை,

நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் செயின்ட் பீட்ஸ் (சென்னை)-நீலாம்பாள் சுப்பிரமணியம் (சேலம்) அணிகள் சந்தித்தன. முதலில் பேட்டிங் செய்த செயின்ட் பீட்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. சுபாங் மிஷ்ரா 72 ரன்கள் விளாசினார். தொடர்ந்து ஆடிய நீலாம்பாள் அணி 10.2 ஓவர்களில் 43 ரன்னில் சுருண்டது. இதனால் செயின்ட் பீட்ஸ் அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் ‘மெகா’ வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தது. மற்றொரு ஆட்டத்தில் சாந்தோம் (சென்னை) அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் கன்கார்டியா (வேலூர்) அணியை தோற்கடித்து 3-வது வெற்றியுடன் அரைஇறுதியை எட்டியது.


இன்று நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் செயின்ட் பீட்ஸ்- மதுரை லீ சாட்லியர் (காலை 9 மணி), சாந்தோம்- கோவை ஜெயேந்திர சரசுவதி (பகல் 1 மணி) அணிகள் மோதுகின்றன.

ஆசிரியரின் தேர்வுகள்...