கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின் வெற்றி தொடருமா? 2–வது ஆட்டம் இன்று நடக்கிறது + "||" + One Day Against New Zealand: Will the Indian team win? The 2nd game is going on today

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின் வெற்றி தொடருமா? 2–வது ஆட்டம் இன்று நடக்கிறது

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியின் வெற்றி தொடருமா? 2–வது ஆட்டம் இன்று நடக்கிறது
இந்தியா–நியூசிலாந்து மோதும் 2–வது ஒரு நாள் போட்டி மவுன்ட் மாங்கானுவில் இன்று நடக்கிறது.

மவுன்ட் மாங்கானு, 

இந்தியா–நியூசிலாந்து மோதும் 2–வது ஒரு நாள் போட்டி மவுன்ட் மாங்கானுவில் இன்று நடக்கிறது. இந்திய அணியின் வெற்றிப்பயணம் தொடருமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

ஒரு நாள் கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நேப்பியரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் போட்டி மவுன்ட் மாங்கானுவில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

முதலாவது ஆட்டத்தில் இந்திய பவுலர்கள் ‌ஷமி, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இணைந்து நியூசிலாந்தை 157 ரன்னில் முடக்கி பிரமாதப்படுத்தினர். பேட்டிங்கில் ஷிகர் தவான் (75 ரன்), கேப்டன் விராட் கோலி (45 ரன்) ஜொலித்தனர். அதே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் முனைப்புடன் இந்திய வீரர்கள் உள்ளனர்.

மைதானம் எப்படி?

அதே சமயம் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியினர் தோல்விக்கு பதிலடி கொடுக்க வரிந்து கட்டுவார்கள். பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் நியூசிலாந்து வலுவாக காணப்படுகிறது. நேப்பியர் ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்த வகையில் இருந்த நிலையில், அவசரகதியில் ஆடி விக்கெட்டுகளை பறிகொடுத்து விட்டனர். அதனால் இன்று அவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் ஆடுவார்கள்.

மவுன்ட் மாங்கானு மைதானத்தில் கடைசியாக இந்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கு எதிராக ஆடிய இரண்டு ஒரு நாள் போட்டியிலும் நியூசிலாந்து 300 ரன்களுக்கு மேல் குவித்தது. ஒரு ஆட்டத்தில் நியூசிலாந்து 7 விக்கெட்டுக்கு 371 ரன்கள் சேர்த்தது. தோல்வி அடைந்தாலும் இலங்கையும் கணிசமாக ரன்கள் எடுத்தது. எனவே பேட்டிங்குக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் ரன்மழையை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். இங்கு நியூசிலாந்து அணி இதுவரை 6 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 3–ல் வெற்றியும், 3–ல் தோல்வியும் சந்தித்துள்ளது. இந்திய அணி இங்கு கால்பதிப்பது இதுவே முதல் முறையாகும்.

காலை 7.30 மணிக்கு...

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, டோனி, கேதர் ஜாதவ், விஜய் சங்கர், புவனேஷ்வர்குமார், முகமது ‌ஷமி, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்.

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம், ஹென்றி நிகோல்ஸ், மிட்செல் சான்ட்னெர், டிம் சவுதி அல்லது சோதி, டிரென்ட் பவுல்ட், லோக்கி பெர்குசன், பிராஸ்வெல்.

இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, டி.டி. ஸ்போர்ட்ஸ் ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.