கிரிக்கெட்

அசாருதீனை சமன் செய்தார் தோனி + "||" + Dhoni is equal to Assarudin

அசாருதீனை சமன் செய்தார் தோனி

அசாருதீனை சமன் செய்தார் தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனை, அதிக ஒரு நாள் போட்டிகளில் விளையாடியவர்கள் பட்டியலில் சமன் செய்தார் மகேந்திர சிங் தோனி
இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. நேப்பியரில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

இதனை தொடர்ந்து, இன்று (சனிக்கிழமை) மவுன்ட் மாங்கானுவில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது. 

இந்தப் போட்டியில் விளையாடிய தோனி, அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வீரர்களில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதினை சமன் செய்தார். அசாருதீன் 334 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இன்றைய போட்டியுடன் தோனியும் 334 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

முன்னாள் நட்சத்திர வீரர்களான சச்சின் டெண்டுல்கர், 463 போட்டிகளிலும் ராகுல் டிராவிட் 340 போட்டிகளிலும் விளையாடி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். தோனி ராகுல் டிராவிட்டை சமன் செய்ய இன்னும் 6-போட்டிகளே உள்ளன.