கிரிக்கெட்

விராட் கோலி நெகிழ்ச்சி + "||" + Virat Kohli elasticity

விராட் கோலி நெகிழ்ச்சி

விராட் கோலி நெகிழ்ச்சி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் போது, டென்னிஸ் ஜாம்பவான் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை சந்தித்தேன்.

நேப்பியர், 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் போது, டென்னிஸ் ஜாம்பவான் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை சந்தித்தேன். அப்போது அவர், சில ஆண்டுகளுக்கு முன்பு சிட்னி கண்காட்சி போட்டியின் போது உங்களை சந்தித்து இருக்கிறேன் என்று கூறினார். இன்னும் நினைவில் வைத்து இருக்கிறீர்களா என்று கூறி வியப்படைந்தேன். எனது உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. சிறு வயதில் இருந்தே நான் அவரை பார்க்கிறேன். அவர் மிகச்சிறந்த மனிதர். அவருடன் செலவிட்ட நேரம், அழகான தருணம்.

நானும், எனது மனைவி அனுஷ்காவும் மற்ற தம்பதி போல் இயல்பாக இருப்பதையே விரும்புகிறோம். பவுர்ணமி அன்று நிலவு வெளிச்சத்தில், நேப்பியர் கடற்கரை பகுதியில் உள்ள பெஞ்சில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். எப்போதும் ரசிகர்கள் எங்களை பின்தொடரும் நிலையில் கிடைத்த அந்த தனிமை எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.

இவ்வாறு கோலி கூறியுள்ளார்.