கிரிக்கெட்

20 ஓவர் கிரிக்கெட் போட்டி: 10 ரன்னில் சுருண்ட சவுத் ஆஸ்திரேலியன் பெண்கள் கிரிக்கெட் அணி + "||" + Imperfect 10 - six extras as South Australian women's side is bowled out for 10

20 ஓவர் கிரிக்கெட் போட்டி: 10 ரன்னில் சுருண்ட சவுத் ஆஸ்திரேலியன் பெண்கள் கிரிக்கெட் அணி

20 ஓவர் கிரிக்கெட் போட்டி: 10 ரன்னில் சுருண்ட சவுத் ஆஸ்திரேலியன் பெண்கள் கிரிக்கெட் அணி
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பெண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சவுத் ஆஸ்திரேலியன் பெண்கள் கிரிக்கெட் அணி 10 ரன்னில் சுருண்டது.
ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான டிவிசன் அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டமொன்றில், தெற்கு ஆஸ்திரேலியன் - நியூ சவுத் வேல்ஸ் அணிகள் மோதின.

முதலில் தெற்கு ஆஸ்திரேலியன் அணி பேட்டிங் செய்தது. நியூ சவுத் வேல்ஸ் அணியின் ரோக்சனா வான்-வீனின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தெற்கு ஆஸ்திரேலியன் அணியின் வீராங்கனைகள் வரிசையாக வெளியேறினார்கள். தொடக்க வீராங்கனை பெபி மான்செல் மட்டும் தாக்குப்பிடித்து 4 ரன்கள் எடுக்க அந்த அணி 10 ரன்னில் சுருண்டது.

இதில் வியப்புக்குரிய விஷயம் என்னவெனில் மற்ற ஆறு ரன்களும் ‘வைடு’ மூலமாக வந்ததுதான். பெபி-ஐத் தவிர மற்ற வீராங்கனைகள் டக் அவுட்டில் வெளியேறினார்கள். 10 ரன்னில் ஆட்டமிழந்தாலும் 10.2 ஓவர்கள் தாக்குப்பிடித்தது.

ரோக்சனா 2 ஓவர்கள் வீசி ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். பின்னர் களமிறங்கிய நியூ சவுத் வேல்ஸ் 2.5 ஓவரில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘வருவோம் வெல்வோம் செல்வோம்’; இம்ரான் தாஹிர் தமிழில் ட்வீட்.
வரும் மார்ச் மாதம் 23-ஆம் தேதி முதல் ஐபிஎல் 2019-க்கான போட்டிகள் தொடங்குகிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் இம்ரான் தாஹிர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்துள்ளார்!
2. 6 பேர் டக் அவுட் 24 ரன்களுக்கு ஆல் அவுட் ஒரு சுவாரசியமான சர்வதேச ஒருநாள் போட்டி
ஓமன் நாட்டில் நேற்று நடைபெற்ற சர்வதேச ஒருநாள் போட்டியில் 6 பேர் டக் அவுட் 24 ரன்களுக்கு ஆல் அவுட்.
3. உலகக் கோப்பை: இந்தியாவை தோற்கடிப்பதன் மூலம் பாகிஸ்தான் வரலாற்றை உருவாக்க முடியும்- மொயின் கான்
உலகக் கோப்பையில் இந்தியாவை தோற்கடிப்பதன் மூலம் பாகிஸ்தான் வரலாற்றை உருவாக்க முடியும் என முன்னாள் கேப்டன் மொயின் கான் கூறியுள்ளார்.
4. கிரிக்கெட் சங்க தலைவரான முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்
முன்னாள் கிரிக்கெட் வீரர் அமித் பண்டாரி அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார்.
5. நியூசிலாந்து விக்கெட் கீப்பரை ஏமாற்றிய டோனி -வைரலாகும் வீடியோ
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது, விக்கெட் கீப்பரை ஏமாற்றுவது போன்று டோனி விளையாடும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...