கிரிக்கெட்

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்கிறேன் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக் அறிவிப்பு + "||" + Martyred Children of soldiers I agree with the study cost

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்கிறேன் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக் அறிவிப்பு

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்கிறேன் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக் அறிவிப்பு
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு விளையாட்டு பிரபலங்கள் ஆதரவுகரம் நீட்டி வருகிறார்கள். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘உயிர்தியாகம் செய்த இந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நாம் எது செய்தாலும் போதுமானதாக இருக்காது. ஆனால் குறைந்தது என்னால் முடிந்த உதவியாக வீரமரணம் அடைந்த வீரர்களின் குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர்களை எனது பெயரில் உள்ள ‘ஷேவாக் சர்வதேச பள்ளி’யில் படிக்க வைக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்

புதுடெல்லி, 

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு விளையாட்டு பிரபலங்கள் ஆதரவுகரம் நீட்டி வருகிறார்கள். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘உயிர்தியாகம் செய்த இந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நாம் எது செய்தாலும் போதுமானதாக இருக்காது. ஆனால் குறைந்தது என்னால் முடிந்த உதவியாக வீரமரணம் அடைந்த வீரர்களின் குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர்களை எனது பெயரில் உள்ள ‘ஷேவாக் சர்வதேச பள்ளி’யில் படிக்க வைக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இரானி கோப்பையை வென்றதன் மூலம் கிடைத்த பரிசுத்தொகையை, தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்குவதாக விதர்பா அணியின் கேப்டன் பைஸ் பாசல் அறிவித்து இருக்கிறார். இதே போல் அரியானா காவல்துறையில் பணியாற்றும் இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர்சிங் தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாகவும், இதே போல் ஒவ்வொருவரும் ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு உதவ முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

விராட் கோலியின் பவுண்டேசன் மற்றும் ஆர்.பி.–சஞ்ஜிவ் கோயங்கோ குரூப் சார்பில் டெல்லியில் நேற்று விளையாட்டு விருது வழங்கும் விழா நடப்பதாக இருந்தது. ஆனால் ராணுவ வீரர்களை இழந்து வாடும் இந்த வேதனையான தருணத்தில் இந்த விழாவை நடத்துவது சரியாக இருக்காது என்பதால் அந்த விழாவை வேறுஒரு நாளுக்கு தள்ளிவைப்பதாக விராட் கோலி டுவிட்டரில் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா–ஆஸ்திரேலியா இன்று மோதல்
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மொகாலியில் இன்று நடக்கிறது.
2. இந்த ஆண்டுக்கான இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் ரிஷாப் பான்ட் உள்பட 25 வீரர்கள் சுரேஷ் ரெய்னா, முரளி விஜய் நீக்கம்
இந்த ஆண்டுக்கான இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் ரிஷாப் பான்ட் உள்பட 25 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: 3–வது ஆட்டத்தில் இந்தியா தோல்வி விராட் கோலியின் சதம் வீண்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. விராட் கோலி சதம் அடித்தும் பலன் இல்லாமல் போனது.
4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: தொடரை கைப்பற்றுமா இந்திய அணி? 3–வது ஆட்டம் ராஞ்சியில் இன்று நடக்கிறது
இந்தியா–ஆஸ்திரேலியா மோதும் 3–வது ஒரு நாள் போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது. ‘ஹாட்ரிக்’ வெற்றியோடு இந்தியா தொடரை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
5. பிக்பாஷ் கிரிக்கெட்: மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி ‘சாம்பியன்’
பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.