கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்க வீரர் ஆலிவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு + "||" + South African player Oliver is resting international cricket

தென்ஆப்பிரிக்க வீரர் ஆலிவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு

தென்ஆப்பிரிக்க வீரர் ஆலிவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு
தென்ஆப்பிரிக்க வீரர் ஆலிவர், சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு போடுகிறார்.
டர்பன்,

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வளரும் நட்சத்திரமாக உருவெடுத்து வரும் வேகப்பந்து வீச்சாளர் டுனே ஆலிவர், இங்கிலாந்தின் கவுண்டி அணியான யார்க்ஷைர் கிளப்புக்காக விளையாட 3 ஆண்டுக்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதுவும் ‘கோல்பாக்’ அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இதன் மூலம் அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. ‘கோல்பாக்’ ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர் ஒப்பந்தம் முடியும் வரை சர்வதேச போட்டிக்கு திரும்ப முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 26 வயதான ஆலிவர் 10 டெஸ்டுகளில் ஆடி 48 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். அவரது முடிவு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக தென்ஆப்பிரிக்க பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன் தெரிவித்தார்.