கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை? 2–வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது + "||" + Will Sri Lanka respond to South Africa? The 2nd one day match is going on today

தென்ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை? 2–வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது

தென்ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை? 2–வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

செஞ்சூரியன்,

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் போட்டி செஞ்சூரியனில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் பந்து வீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் நேர்த்தியாக செயல்பட்ட பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி, அதே உத்வேகத்துடன் களம் காண காத்திருக்கிறது. மலிங்கா தலைமையிலான இலங்கை அணி முதல் ஆட்டத்தில் 231 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்ததால் சரிவு ஏற்பட்டது. தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணி பதிலடி கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.