தன் பெயர் சூட்டப்பட்ட பெவிலியனைத் திறந்து வைக்க டோனி மறுப்பு


தன் பெயர் சூட்டப்பட்ட பெவிலியனைத் திறந்து வைக்க டோனி மறுப்பு
x
தினத்தந்தி 7 March 2019 6:05 AM GMT (Updated: 7 March 2019 6:05 AM GMT)

தன் பெயர் சூட்டப்பட்ட பெவிலியனைத் திறந்து வைக்க டோனி மறுப்பு தெரிவித்து விட்டார்.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் கவாஸ்கர் பெயரில் ஒரு மாடமும், டெல்லி பெரோஸ் ஷா கோட்லாவில் சேவாக் கேட்டும் உள்ளதுபோல ராஞ்சி மைதானத்தில் உள்ள பெவிலியன் பகுதிக்கு டோனியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கடந்த வருட கூட்டத்தில், வடக்கு பிளாக் ஸ்டாண்ட் பகுதிக்கு டோனியின் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டது என்று கூறுகிறார் ஜார்கண்ட் கிரிக்கெட் சங்க செயலர் தெபசிஸ் சக்ரபோர்தி. டோனி பெவிலியனைத் திறந்து வைக்க டோனியை அழைத்தோம். ஆனால் என்னுடைய வீட்டை நானே திறந்து வைப்பதா என தன்னடக்கத்துடன் மறுத்துவிட்டார் என்று அவர் கூறியுள்ளார்.

ராஞ்சி மைதானத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது ஒருநாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது. ராஞ்சியில் டோனி விளையாடும் கடைசி ஒருநாள் ஆட்டம் இது என்று கூறப்படுகிறது. எனினும் இதற்கென விசேஷ நிகழ்ச்சிகள் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை.

Next Story