கிரிக்கெட்

2வது டி20 போட்டி; இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்திடம் தோல்வி + "||" + Indian women lose second T20, series to England

2வது டி20 போட்டி; இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்திடம் தோல்வி

2வது டி20 போட்டி; இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்திடம் தோல்வி
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 2வது டி20 சர்வதேச போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது.
கவுகாத்தி,

இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச போட்டி தொடர் நடந்து வருகிறது.  இதில் முதல் போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து 2வது டி20 போட்டி இன்று கவுகாத்தி நகரில் நடந்தது.  இதில் பந்து வீச்சை தேர்வு செய்த இங்கிலாந்து அணி இந்திய அணியின் ரன் விகிதத்தினை வெகுவாக கட்டுப்படுத்தியது.

இதனால் இங்கிலாந்து அணிக்கு 112 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்தின் தொடக்க வீராங்கனை டேனியல் வியாட் ஆட்டமிழக்காமல் 64 (55 பந்துகள்) ரன்கள் சேர்த்துள்ளார்.  இதில் 6 பவுண்டரிகளும் அடித்துள்ளார்.

அவருடன் இணைந்து விளையாடி ஆட்டமிழந்த லாரென் வின்பீல்டு (29) ரன்கள் சேர்த்து அணி வெற்றி பெற உதவினார்.  மற்ற வீராங்கனைகளான பியுமோன்ட், ஜோன்ஸ், சிவெர் மற்றும் சி. நைட் ஆகியோர் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர்.  பிரென்ட் (2) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இறுதியில் இங்கிலாந்து அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலக்கை எட்டி போட்டியில் வெற்றி பெற்றது.  இதனால் 2-0 என்ற கணக்கில் அந்த அணி முன்னிலை வகிக்கின்றது.