கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு 185 ரன்கள் இலக்கு + "||" + IPL cricket competition Rajasthan team a target of 185 runs

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு 185 ரன்கள் இலக்கு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: ராஜஸ்தான் அணிக்கு 185 ரன்கள் இலக்கு
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர்,

ஜெய்ப்பூரில் இன்று, ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான 4-வது லீக் போட்டி தொடங்கியது.

இந்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்தது. 20 ஓவரின் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்க்கு 184 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி சார்பில் அதிரடியாக விளையாடிய கிறிஸ் கெயில் 47 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார். சர்ஃப்ராஸ் கான் 46 ரன்கள், மயங்க் அகர்வால் 22 ரன்கள் எடுத்தனர்.

ராஜஸ்தான் அணியில், ஸ்டோக்ஸ் 2 விக்கெட், குல்கர்னி கௌதம் தலா 1 விக்கெட்  விழ்த்தினர்.

இதனையடுத்து, ராஜஸ்தான் அணி 185 ரன்கள் இலக்குடன் களமிறங்க உள்ளது.