கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம் + "||" + In IPL cricket Today's game

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்
முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக 181 ரன்கள் குவித்த போதிலும் தோல்வியை தழுவியது.

ஐதராபாத் சன்ரைசர்ஸ்– ராஜஸ்தான் ராயல்ஸ்

இடம்: ஐதராபாத், நேரம்: இரவு 8 மணி

வில்லியம்சன் கேப்டன் ரஹானே

நட்சத்திர வீரர்கள்

வார்னர், ரஷித்கான், புவனேஷ்வர்குமார், விஜய் சங்கர், மனிஷ் பாண்டே

ஸ்டீவன் சுமித், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜெய்தேவ் உனட்கட், சஞ்சு சாம்சன்

இதுவரை நேருக்கு நேர் 9

5 வெற்றி 4 வெற்றி

உள்ளூரில் ஆதிக்கம் செலுத்துமா ஐதராபாத்?

முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக 181 ரன்கள் குவித்த போதிலும் தோல்வியை தழுவியது. இதில் கடைசி 3 ஓவர்களில் 53 ரன்கள் தேவைப்பட்ட போது, கொல்கத்தா வீரர் ஆந்த்ரே ரஸ்செல் அதிரடி காட்டி வெற்றிக்கனியை பறித்தார். காயத்தால் அந்த ஆட்டத்தில் ஆடாத ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் இன்றைய மோதலில் களம் காணுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓராண்டு தடைக்கு பிறகு அணிக்கு திரும்பிய டேவிட் வார்னர் பார்மில் இருப்பது ஐதராபாத் அணிக்கு கூடுதல் நம்பிக்கை அளிக்கிறது. அது மட்டுமின்றி உள்ளூர் சூழல் ஐதராபாத் அணிக்கு அனுகூலமான வி‌ஷயமாகும். இந்த ஆடுகளம் பந்து வீச்சுக்கு உதவிகரமாக இருக்கும். இங்கு ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் ஐதராபாத் அணி தயாராகி வருகிறது.

பேட்டிங்கில் பலம் பொருந்திய அணியான ராஜஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் தோல்வி அடைந்தது. அந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர் (69 ரன்) ‘மன்கட்’ முறையில் ரன்–அவுட் செய்யப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில் அதை ஒதுக்கிவிட்டு வெற்றிக்கணக்கை தொடங்குவதில் தீவிரம் காட்டி வருகிறது.

(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)


தொடர்புடைய செய்திகள்

1. டி.என்.பி.எல். கிரிக்கெட்: காரைக்குடி–கோவை அணிகள் இன்று மோதல் சென்னையில் நடக்கிறது
4–வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இந்த சீசனில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி உள்பட இரண்டு ஆட்டங்கள் மட்டுமே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
2. டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் வெற்றிப்பயணம் தொடருமா? காஞ்சி வீரன்சுடன் இன்று மோதல்
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் உத்வேகத்துடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இன்று காஞ்சி வீரன்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
3. உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ‘ஓவர்துரோ’ மூலம் வந்த பவுண்டரியை வேண்டாம் என்று சொல்லவில்லை பென் ஸ்டோக்ஸ் மறுப்பு
இங்கிலாந்தில் கடந்த மாதம் நடந்த 12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து–நியூசிலாந்து அணிகள் மோதின.
4. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடை பெற்றார் வேணுகோபால் ராவ்
இந்திய கிரிக்கெட் வீரர் வேணுகோபால் ராவ் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
5. எம்.எஸ்.டோனி கிரிக்கெட்டில் இருந்து நிரந்தர ஓய்வு இல்லை - 2 மாதமே ஓய்வு தகவல்
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் எம்.எஸ்.டோனி கலந்து கொள்ளவில்லை, இப்போது ஓய்வும் பெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.