கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெயில் புதிய சாதனை + "||" + Chris Gayle 1st batsman to hit 300 sixes in IPL history

ஐபிஎல் கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெயில் புதிய சாதனை

ஐபிஎல் கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெயில் புதிய சாதனை
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 300 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை கிறிஸ் கெயில் எட்டியுள்ளார்.
மெகாலி,

ஐபில் கிரிக்கெட் போட்டி தொடரில் 300 சிக்சர்கள் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை கிறிஸ் கெயில் நிகழ்த்தியுள்ளார். மொகாலியில் நடைபெற்று வரும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கெயில் 24 பந்தில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில், 4 சிக்ஸர், 3 பவுண்டரிகள் விளாசினார். இந்தப் போட்டியில் 2-வது சிக்ஸர் அடித்த போதே, ஐபிஎல் தொடரில் 300 சிக்ஸர் அடித்த முதல் வீரர் என்ற மைல்கல்லை கெயில் எட்டியுள்ளார் 100 சிக்ஸர், 200 சிக்ஸர் அடித்த முதல் வீரரும் இவர்தான்.

2009-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர்களில் கிறிஸ் கெயில் விளையாடி வருகிறார். 115 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், இதுவரை மொத்தம் 302 சிக்ஸர் விளாசியுள்ளார். இதில் அதிகபட்சமாக, 2012-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 59 சிக்ஸர் விளாசியுள்ளார். அதற்கடுத்து, 2013-இல் 51 சிக்ஸர் அடித்தார்.

கெயிலுக்கு அடுத்தபடியாக, டிவில்லியர்ஸ் 192 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். 187 சிக்ஸர்களுடன் தோனி மூன்றாவது இடத்திலும், 186  சிக்ஸர்களுடன் சுரேஷ் ரெய்னா நான்காவது இடத்திலும் உள்ளனர்.  கெயிலுக்கும், டிவில்லியர்சுக்குக்கும் இடையில் 110 சிக்ஸர் இடைவெளி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பைக்குப் பிறகு ஓய்வை அறிவிக்க இருக்கும் 5 முன்னணி கிரிக்கெட் வீரர்கள்..!
விளையாட்டை பொறுத்தவரை ஒய்வு என்பது தவிர்க்க முடியாதது. நமக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களில் பெரும்பாலோர் தங்கள் ஓய்வை அறிவிக்க காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
2. தொழிலதிபர் நெஸ் வாடியாவுக்கு 2 ஆண்டுகள் சிறை
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியாவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஜப்பான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3. ‘டோனி பெரும் அச்சுறுத்தலாக விளங்கினார்’ - பெங்களூரு அணி கேப்டன் விராட்கோலி கருத்து
‘டோனி எங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கினார்’ என்று பெங்களூரு அணி கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.
4. ஐபிஎல் போட்டியை காணவிடாமல் இடையூறு செய்ததாக தொலைக்காட்சி நடிகை மீது வழக்குப்பதிவு
ஐபிஎல் போட்டியை காணவிடாமல் இடையூறு செய்ததாக தொலைக்காட்சி நடிகை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
5. ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு எதிராக ஐதராபாத் அணி பந்து வீச்சு தேர்வு
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.