கிரிக்கெட்

காத்திருந்த மும்பை பாட்டியுடன் செல்பி எடுத்துக் கொண்ட டோனி வைரலாகும் வீடியோ + "||" + Heartwarming to see this gesture from the legend in Mumbai

காத்திருந்த மும்பை பாட்டியுடன் செல்பி எடுத்துக் கொண்ட டோனி வைரலாகும் வீடியோ

காத்திருந்த மும்பை பாட்டியுடன் செல்பி எடுத்துக் கொண்ட டோனி  வைரலாகும் வீடியோ
காத்திருந்த மும்பை பாட்டியுடன் செல்பி எடுத்துக் கொண்ட டோனி வீடியோ வைரலாகி உள்ளது.
சென்னை மட்டுமில்லாது டோனி விளையாடும் பிற மாநிலங்களிலும் அவருக்கு மைதானங்களில் பலத்த ஆதரவு இருக்கும்.

அந்த வகையில் டோனியை பார்ப்பதற்காக மும்பை வான்கடே மைதானத்துக்கு வந்திருந்த பாட்டி ஒருவரை டோனி  சந்தித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது.

மும்பையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2019-ன் 15வது போட்டியில் டோனி தலைமையில் சிஎஸ்கே அணி முதல் தோல்வியைத் தழுவியது. பாண்டியா சகோதரர்களின் ஆல்ரவுண்ட் ஆட்டத்தினால் மும்பை இந்தியன்ஸ் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் வான்கடே மைதானத்துக்கு டோனி விளையாடும் சிஎஸ்கே வை ஆதரிப்பதற்காக மும்பையை சேர்ந்த பாட்டி ஒருவர் தனது பேத்தியுடன் வந்திருந்தார்.

போட்டி முடிந்த பின்னர் அதிகாரிகள் இதனை டோனியிடம் தெரிவிக்க,  அவரை காண்பதற்காக டோனி வந்தார்.  டோனியை கண்டவுடன் அந்த பாட்டி டோனியின் கைகளை பிடித்துக் கொண்டு வாழ்த்தினார்.

டோனியும் அந்த பாட்டியுடன் பணிவாக பேசி செல்பி  எடுத்து கொண்டார்.

இந்த வீடியோ ஐபிஎல் ட்விட்டர் பக்கம் வெளியிட்டிருந்தது. இந்த வீடியோ தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ‘டோனி பெரும் அச்சுறுத்தலாக விளங்கினார்’ - பெங்களூரு அணி கேப்டன் விராட்கோலி கருத்து
‘டோனி எங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கினார்’ என்று பெங்களூரு அணி கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.
2. காங்கோ நாட்டில் ருசிகரம்: ‘செல்பி’க்கு அடிமையான கொரில்லாக்கள்
காங்கோ நாட்டில் செல்பிக்கு அடிமையான கொரில்லாக்கள் குறித்த ருசிகர தகவல் வெளியாகி உள்ளது.
3. விமான நிலையத்தில் தூங்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஐபிஎல் டைமிங்கை சூசகமாக சுட்டிக் காட்டிய டோனி
ஐபிஎல் டைமிங்கை சூசகமாக சுட்டிக் காட்டி டோனி தான் தூங்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார் டோனி.
4. ‘‘எப்படி இருக்கீங்க; நல்லா இருக்கேன்” - இணையத்தில் வைரலாகும் தோனி மகள் பேச்சு
‘‘எப்படி இருக்கீங்க; நல்லா இருக்கேன்” என தோனி மகள் தமிழில் பேசும் பேச்சு இணையத்தில் வைரலாகி உள்ளது.
5. 3-வது ஒருநாள் போட்டி: 32 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
இந்திய அணிக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 32 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.