கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் + "||" + World Cup Cricket: Steven Sumith, David Warner in the Australian team

உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர்

உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
மெல்போர்ன்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான அணிகளை அறிவிக்க வருகிற 23-ந் தேதியை கடைசி நாளாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்த நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. ஆரோன் பிஞ்ச் கேப்டனாக தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளார்.


பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டு இருந்த முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோரின் தடை காலம் முடிந்து விட்டதால் இருவரும் உலக கோப்பை அணியில் இடம் பெறுவார்களா? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஐ.பி.எல். போட்டியில் டேவிட் வார்னர் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியிலும், ஸ்டீவன் சுமித் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் விளையாடி வருகிறார்கள்.

வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட், நல்ல பார்மில் இருக்கும் பேட்ஸ்மேன் பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆல்-ரவுண்டர் ஆஷ்டன் டர்னெர் பெயர் பரிசீலனை செய்யப்படவில்லை. சமீபத்தில் நடந்த ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட உஸ்மான் கவாஜாவுக்கு அணியில் இடம் கிடைத்து இருக்கிறது.

உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வருமாறு:-

ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் சுமித், ஷான் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், ஜெயே ரிச்சர்ட்சன், கம்மின்ஸ், ஜாசன் பெரேன்டோர்ப், நாதன் கவுல்டர் நிலே, ஆடம் ஜம்பா, நாதன் லயன்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை (ஜூன் 1-ந் தேதி) எதிர்கொள்கிறது. இதற்கிடையில் உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியின் பயிற்சி முகாம் மே 2-ந் தேதி தொடங்குகிறது. ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அனைவரும் தங்களது பயிற்சி முகாமுக்கு திரும்புவார்கள் என்பதால் கடைசி கட்ட ஐ.பி.எல். போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விளையாடமாட்டார்கள் என்று தெரிகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை கிரிக்கெட் அரை இறுதியில் இந்தியா விளையாடும்; சவுரவ் கங்குலி
உலக கோப்பை கிரிக்கெட் அரை இறுதி போட்டியில் இந்தியா விளையாடும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
2. உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை இந்திய அணி புறக்கணிக்குமா? - மத்திய சட்ட மந்திரி பதில்
உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை இந்திய அணி புறக்கணிக்குமா? என்ற கேள்விக்கு மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் பதில் அளித்தார்.
3. தேசத்தைவிட உலக கோப்பை முக்கியம் கிடையாது - ஹர்பஜன் சிங், அசாருதீன்
தேசத்தைவிட உலக கோப்பை முக்கியம் கிடையாது என ஹர்பஜன் சிங் மற்றும் அசாருதீன் கூறி உள்ளனர்.
4. உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் - இந்தியா மோதும் நாடு தேதி விவரம்
உலக கோப்பை போட்டி அட்டவணை முழுவிவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியா மோதும் நாடு தேதி மற்றும் இடம் அறிவிப்பு.
5. உலக கோப்பை கிரிக்கெட் படத்தில் ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிக்கும் ஜீவா
உலக கோப்பை கிரிக்கெட் படத்தில் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடிக்க தேர்வாகி உள்ளார்.