உலக கோப்பைக்கான அணியில் தமிழ் பேசும் வீரர் ஒருவராவது என்னுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது தினேஷ் கார்த்திக் சொல்கிறார்


உலக கோப்பைக்கான அணியில் தமிழ் பேசும் வீரர் ஒருவராவது என்னுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது தினேஷ் கார்த்திக் சொல்கிறார்
x
தினத்தந்தி 18 April 2019 10:00 PM GMT (Updated: 18 April 2019 8:46 PM GMT)

ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு நான் தினமும் பயிற்சி எடுத்து முழுமையான பேட்ஸ்மேனாக முன்பு போல் என்னால் செயல்பட முடியும்.

கொல்கத்தா, 

உலக கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் 2–வது முறையாக இடம் பிடித்துள்ள விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அளித்த ஒரு பேட்டியில், ‘டோனியை பொறுத்த வரை நான் ஒரு சிறிய முதலுதவி பெட்டியாகவே அணியுடன் உலக கோப்பை போட்டிக்கு பயணிக்கிறேன். டோனிக்கு காயம் ஏற்பட்டு விளையாட முடியாமல் போனால் அந்த நாளில் மட்டுமே என்னால் களம் காண முடியும். 4–வது வீரராகவோ? அல்லது போட்டியை வெற்றிகரமாக முடிக்கும் பேட்ஸ்மேனாகவோ? என்னால் சிறப்பாக செயல்பட முடியும். ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு நான் தினமும் பயிற்சி எடுத்து முழுமையான பேட்ஸ்மேனாக முன்பு போல் என்னால் செயல்பட முடியும். உலக கோப்பை அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களில் என்னுடன் தமிழ் பேசும் வீரர் ஒருவராவது (விஜய் சங்கர்) இருக்கிறார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடன் தமிழ் பேசி மகிழ முடியும். இருவரும் இணைந்து இட்லி, தோசை சாப்பிட முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.


Next Story