ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்
x
தினத்தந்தி 18 April 2019 9:15 PM GMT (Updated: 18 April 2019 9:02 PM GMT)

இடம்: கொல்கத்தா, நேரம்: இரவு 8 மணிதினேஷ் கார்த்திக

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்– பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்

இடம்: கொல்கத்தா, நேரம்: இரவு 8 மணி

தினேஷ் கார்த்திக் கேப்டன் விராட் கோலி

நட்சத்திர வீரர்கள்

டிவில்லியர்ஸ், பார்த்தீவ் பட்டேல், மொயீன் அலி, யுஸ்வேந்திர சாஹல், நவ்தீப் சைனி

ஆந்த்ரே ரஸ்செல், கிறிஸ் லின், சுப்மான் கில், சுனில் நரின், குல்தீப் யாதவ்

இதுவரை நேருக்கு நேர் 23

14 வெற்றி 9 வெற்றி

சரிவில் இருந்து மீள்வது யார்?

முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்வி என்று 8 புள்ளிகள் பெற்று இருக்கிறது. அதிரடி மன்னன் ஆந்த்ரே ரஸ்செல் நேற்று முன்தினம் பயிற்சியின் போது ‘பவுன்சர்’ பந்து தாக்கி இடது தோள்பட்டையில் காயமடைந்தார். எனவே இன்றைய மோதலில் ரஸ்செல் களம் காணுவாரா? என்பதில் சந்தேகம் நீடிக்கிறது. கடைசியாக ஆடிய 3 ஆட்டங்களிலும் வரிசையாக தோல்வி அடைந்த கொல்கத்தா அணி, சொந்த ஊரில் சரிவில் இருந்து மீளும் முனைப்புடன் காத்திருக்கிறது.

இன்னொரு பக்கம் அடிமேல் அடி வாங்கி வரும் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி 8 ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் வெற்றியும், 7–ல் தோல்வியும் கண்டுள்ளது. எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை பற்றி கொஞ்சமாவது நினைத்து பார்க்க முடியும். இந்த ஆட்டத்திலும் தோற்றால் நடையை கட்ட வேண்டியது தான். அதனால் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது. பெங்களூரு அணியை பொறுத்தவரை கேப்டன் கோலி, டிவில்லியர்ஸ், மொயீன் அலி பார்மில் உள்ளனர். மற்ற வீரர்களும் ஒத்துழைப்பு தந்தால் எழுச்சி பெறலாம். புதிய வரவாக பெங்களூரு அணியுடன் இணைந்துள்ள தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் இந்த ஆட்டத்தில் ஆடுவதற்கு வாய்ப்புள்ளது. ஏற்கனவே இவ்விரு அணிகளும் சந்தித்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 205 ரன்கள் குவித்த போதிலும் அதை கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் விரட்டிப்பிடித்து சாதனை படைத்தார். அந்த தோல்விக்கு அவர்களது இடத்தில் பெங்களூரு அணி பழிதீர்க்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)


Next Story