கிரிக்கெட்

பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சூப்பர் நோவாஸ்–வெலா சிட்டி அணிகள் இன்று மோதல் + "||" + Women's Over 20 Cricket Super Noawas-Vela City teams in the final Confrontation today

பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சூப்பர் நோவாஸ்–வெலா சிட்டி அணிகள் இன்று மோதல்

பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சூப்பர் நோவாஸ்–வெலா சிட்டி அணிகள் இன்று மோதல்
3 அணிகள் இடையிலான பெண்கள் 20 ஓவர் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது.

ஜெய்ப்பூர், 

3 அணிகள் இடையிலான பெண்கள் 20 ஓவர் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் லீக் ஆட்டங்கள் முடிவில் மிதாலி ராஜ் தலைமையிலான வெலா சிட்டி, ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ், மந்தனா தலைமையிலான டிரைல் பிளாசர்ஸ் அணிகள் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி கண்டு 2 புள்ளிகளுடன் சமநிலை வகித்தன. ‘ரன்–ரேட்’ அடிப்படையில் முன்னிலை பெற்ற சூப்பர் நோவாஸ், வெலா சிட்டி அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. டிரைல் பிளாசர்ஸ் அணி வெளியேறியது. இதன் இறுதிப்போட்டி ஜெய்ப்பூரில் இன்று (சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் சூப்பர் நோவாஸ்–வெலா சிட்டி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடைசி லீக் ஆட்டத்தில் சூப்பர் நோவாஸ் அணி 12 ரன் வித்தியாசத்தில் வெலா சிட்டி அணியை வீழ்த்தி இருந்தது. அதற்கு பதிலடி கொடுக்க வெலா சிட்டி அணி முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.