கிரிக்கெட்

‘மிஸ்டர் அண்ட் மிசஸ் ரஸல்’காதல் முதல் கிரிக்கெட் வரை... + "||" + Mr. and Mrs Russell

‘மிஸ்டர் அண்ட் மிசஸ் ரஸல்’காதல் முதல் கிரிக்கெட் வரை...

‘மிஸ்டர் அண்ட் மிசஸ் ரஸல்’காதல் முதல் கிரிக்கெட் வரை...
2019-ம் ஆண்டிற்கான ஐ.பி.எல். திருவிழா, இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.
நாளை நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியுடன் ஐ.பி.எல். டிரெண்டிங் ஓய்ந்துவிடும் என்றாலும், கொல்கத்தா அணியின் அதிரடி வீரர் ஆந்த்ரே ரஸல் மட்டுமே அடுத்த ஐ.பி.எல்.வரை டிரெண்டிங் கிலேயே இருப்பார். ஏனெனில் அவர் விளையாடிய விதம் அப்படி. கிரிக்கெட் மட்டையோடு களத்திற்குள் நுழைந்து ருத்ரதாண்டம் ஆடிய விதம், ரஸலை பேசு பொருளாகவே வைத்திருக்கிறது. அதேசமயம் ரஸலின் மனைவி ஜாசிம் லோராவும் சமீபகாலங்களில் பேசு பொருளாகவும், கூகுளில் தேடு பொருளாகவும் மாறிவிட்டார். ரஸலின் மனைவி என்பதை தாண்டி, அவரை பற்றி பல சுவாரசியமான தகவல்கள் கிடைப்பதுதான், இந்த தேடலுக்கான காரணம். அதுபற்றி, ஒரு குட்டி தேடல் இதோ...

ஜாசிம் லோரா, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், மியாமி பகுதியில் பிறந்தவர்.

பார்ப்பதற்கு மூக்கும், முழியுமாக இருக்கும் ஜாசிம், பேஷன் துறையில் மாடல் அழகியாக இருக்கிறார்.

அமெரிக்காவில் பிறந்தாலும் ஜாசிமிற்கு, ஜமைக்காவில்தான் மாடல் அழகிக்குரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

அழகான ஜாசிமும், அதிரடியான ஆட்டக்காரர் ரஸலும் காதலித்து, கரம்பிடித்தவர்கள்.

சில மாதங்கள் காதலித்து, 2014-ம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டு, 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இதற்கிடைப்பட்ட நாட்களில் ‘லிவிங் டூகெதர்’ முறையில் வாழ்ந்திருக்கிறார்கள்.

மாடல் அழகியான ஜாசிமிற்கு, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் என்றால் கொள்ளை பிரியமாம். அவரை நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆசை, ரஸலின் கொல்கத்தா அணி விஜயத்திற்கு பிறகுதான் நிறைவேறியிருக்கிறது.

மிஸ்டர் அண்ட் மிசஸ் ரஸல்’ தம்பதியருக்கு ஆலியா ரஸல் என்ற பெண் குழந்தை இருக்கிறது.

காதல், திருமணம் ஆகியவற்றுக்கு முன்பாகவே ரஸலும், ஜாசிமும் ‘டப்ஸ்மாஷ்’ மாதிரியிலான ஒரு வீடியோ அப்ளிகேஷனில் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள். அந்த காலகட்டத்தில் இவர்கள் இணைந்த அந்த வீடியோ படுவைரலாக பரவியதாம்.

திருமணத்திற்கு பிறகும் மாடலிங் அழகியாக போஸ் கொடுக்கும் ஜாசிம், சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர். அதனால் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தினமும் புகைப்படங்கள் வெளிவந்து கொண்டே இருக்கும். சமீபத்தில் கூட, ஜாசிம்-ரஸல் இருவரும் முத்தமிடும் வீடியோ காட்சிகள், இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல்.போட்டிகளை போன்று பல நாடுகளில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் மிக முக்கியமான வீரர்களில் ரஸலும் ஒருவர். இப்படி ரஸல் கிரிக்கெட் போட்டிகளுக்கு பல்வேறு நாடுகளுக்கு பயணிக்கும் போதெல்லாம், ஜாசிமும் ரஸலுடன் பயணிக் கிறார். ஏனெனில் ரஸல் விளையாடும்போது, அதை நேரடியாக பார்த்து ரசிப்பதில் ஜாசிமிற்கு அலாதியான ஆனந்தமாம்.