கிரிக்கெட்

பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு + "||" + Team to win the team Rs 28 crore gift

பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு

பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு
ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணிக்கு பரிசு கோப்பையுடன் ரூ.28 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணிக்கு பரிசு கோப்பையுடன் ரூ.28 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது. 2–வது இடம் பெறும் அணிக்கு ரூ.14 கோடி பரிசாக அளிக்கப்படுகிறது. இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. தண்ணீர் பாட்டில் மற்றும் தடை செய்யப்பட்ட எந்த பொருட்களையும் மைதானதுக்குள் எடுத்து செல்ல அனுமதி கிடையாது. சுமார் 3 ஆயிரம் போலீசார் ஸ்டேடியம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள். அத்துடன் ஸ்டேடியத்தை சுற்றி உள்ள பகுதியில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.