கிரிக்கெட்

பயிற்சி ஆட்டத்தில் காயம் அடைந்த இங்கிலாந்து வீரர் மார்க்வுட் உடல் தகுதியில் முன்னேற்றம் + "||" + England player Markwood injury improved in training practice

பயிற்சி ஆட்டத்தில் காயம் அடைந்த இங்கிலாந்து வீரர் மார்க்வுட் உடல் தகுதியில் முன்னேற்றம்

பயிற்சி ஆட்டத்தில் காயம் அடைந்த இங்கிலாந்து வீரர் மார்க்வுட் உடல் தகுதியில் முன்னேற்றம்
பயிற்சி ஆட்டத்தில் காயம் அடைந்த இங்கிலாந்து வீரர் மார்க்வுட் உடல் தகுதியில் முன்னேற்றம் அடைந்துள்ளார்.
லண்டன்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் ஜோப்ரா ஆர்ச்சர், மார்க்வுட் ஆகியோர் பயிற்சி ஆட்டத்தின் போது காலில் காயம் அடைந்தனர். இதனால் அவர்கள் இருவரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்தில் (வருகிற 30-ந் தேதி) விளையாட முடியுமா? என்ற சந்தேகம் எழுந்தது. இருவருக்கும் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இருவருக்கும் ஏற்பட்ட காயம் பயப்படும்படியாக இல்லை என்பது தெரியவந்துள்ளது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்துக்கு முன்பு மார்க்வுட் முழு உடல் தகுதியை எட்டிவிடுவார் என்று இங்கிலாந்து அணி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஜோப்ரா ஆர்ச்சர் உடல் தகுதி பெற்று விட்டதுடன் நேற்று நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடினார்.