கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க வீரர் ஸ்டெயின் விளையாடமாட்டார் + "||" + South African player Stain does not play

உலக கோப்பை கிரிக்கெட் தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க வீரர் ஸ்டெயின் விளையாடமாட்டார்

உலக கோப்பை கிரிக்கெட் தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க வீரர் ஸ்டெயின் விளையாடமாட்டார்
12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

லண்டன், 

12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து–தென்ஆப்பிரிக்கா (பிற்பகல் 3 மணி) அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடுகையில் தோள்பட்டையில் காயம் அடைந்த தென்ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் இன்னும் முழு உடல் தகுதியை எட்டவில்லை. இதனால் அவர் உலக கோப்பை போட்டியில் தொடக்க லீக் ஆட்டத்தில் விளையாடமாட்டார் என்று தென்ஆப்பிரிக்க அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர் 2–வது லீக் ஆட்டத்திலும் ஆடுவது சந்தேகம் தான். ஜூன் 5–ந் தேதி நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான 3–வது லீக் ஆட்டத்தில் ஸ்டெயின் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.