கிரிக்கெட்

இவரெல்லாம் ஒரு கேப்டனா? பாகிஸ்தான் கேப்டனை விமர்சிக்கும் ஷோயப் அக்தர் + "||" + Shoaib Akhtar, who criticizes Pakistan captain

இவரெல்லாம் ஒரு கேப்டனா? பாகிஸ்தான் கேப்டனை விமர்சிக்கும் ஷோயப் அக்தர்

இவரெல்லாம் ஒரு கேப்டனா? பாகிஸ்தான் கேப்டனை விமர்சிக்கும் ஷோயப் அக்தர்
வெஸ்ட் இண்டீஸிடம் அடைந்த படுதோல்வியின் எதிரொலியாக பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமதுவை முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசிடம் படுதோல்வி அடைந்தது. 

இந்த தோல்வியால் விரக்தி அடைந்த பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தர், சர்பராஸ் அகமது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது டாஸ் போடும்போது பார்க்கிறேன், சர்பராஸ் அகமதுவின் வயிறு வெளியில் வந்து கிடக்கிறது. அவரது முகமும் குண்டாக இருக்கிறது. இதுவரை இப்படி ஒரு அன்பிட்டான வீரர் கேப்டனாக இருந்து நான் பார்த்ததில்லை. அவரால் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் நகர முடியவில்லை. விக்கெட் கீப்பிங் செய்யும்போது திணறுகிறார் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

சர்பராஸ் அகமதுவை விமர்சித்தாலும், பின்னர் "என்னதான் இருந்தாலும் அவர்கள் நமது நாட்டுக்காக ஆடுகிறார்கள். எனவே அவர்களுக்கு ஆதரவாக நாம் இருக்க வேண்டும்" என்றும் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.