கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் ரசிகரின் வினோத போராட்டம் + "||" + The strange struggle of Sri Lankan cricket fans

இலங்கை கிரிக்கெட் ரசிகரின் வினோத போராட்டம்

இலங்கை கிரிக்கெட் ரசிகரின் வினோத போராட்டம்
இலங்கை கிரிக்கெட் ரசிகர் ஒருவர் வினோத போராட்டம் ஒன்றை நடத்தினார்.
கொழும்பு,

இலங்கையில் அந்த நாட்டு கிரிக்கெட் ரசிகர் ஒருவர் திடீரென மரத்தில் ஏறி நின்றபடி வித்தியாசமான போராட்டத்தில் குதித்தார். ‘இலங்கை அணி மோசமான நிலைமையில் இருக்கிறது. உலக கோப்பை கிரிக்கெட்டில் திசரா பெரேராவை தொடக்க ஆட்டக்காரராக விளையாட வைக்க வேண்டும். அப்போது தான் மரத்தை விட்டு கீழே இறங்குவேன்’ என்று ஆவேசமாக கூறினார். பிறகு அந்த பகுதியில் உள்ளவர்கள் அவரை சமாதானப்படுத்தினர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.