கிரிக்கெட்

இந்திய அணிக்கு ஜெர்மனி கால்பந்து நட்சத்திரம் தாமஸ் முல்லர் ஆதரவு + "||" + Germany football star Thomas Müller supported the Indian team

இந்திய அணிக்கு ஜெர்மனி கால்பந்து நட்சத்திரம் தாமஸ் முல்லர் ஆதரவு

இந்திய அணிக்கு ஜெர்மனி கால்பந்து நட்சத்திரம் தாமஸ் முல்லர் ஆதரவு
இந்திய அணிக்கு ஜெர்மனி கால்பந்து நட்சத்திரம் தாமஸ் முல்லர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
லண்டன்,

2014-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற ஜெர்மனி கால்பந்து அணியில் இடம் பிடித்திருந்த அந்த அணியின் நட்சத்திர வீரர் தாமஸ் முல்லர், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய அணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இந்திய அணியின் சீருடையை அணிந்த படியும், ஒரு கையில் பேட்டுடனும், சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்த உலக கோப்பை போட்டியில் பங்கேற்றுள்ள அனைத்து அணிகளும் நன்றாக செயல்படவும், ஆட்டங்கள் திரில்லிங்காக அமையவும் வாழ்த்துகள். குறிப்பாக விராட்கோலி தலைமையிலான இந்திய அணிக்கு எனது ஆதரவு உண்டு. அவர் ஜெர்மனி கால்பந்து அணியின் ரசிகர். கடந்த காலங்களில் பலமுறை அவர் ஜெர்மனி கால்பந்து அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்த தாமஸ் முல்லருக்கு, விராட்கோலி ‘டுவிட்டர்’ மூலம் நன்றி தெரிவித்து இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய அணியின் உத்வேகத்தை லாதம் ஆட்டம் பறித்து விட்டது - விராட் கோலி
இந்திய அணியின் உத்வேகத்தை லாதம் ஆட்டம் பறித்து விட்டதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
2. இந்திய அணி ஆசிய கோப்பை போட்டிக்கு வராவிட்டால் உலக கோப்பை போட்டியை புறக்கணிப்போம் - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல்
இந்திய அணி ஆசிய கோப்பை போட்டிக்கு வராவிட்டால் உலக கோப்பை போட்டியை புறக்கணிப்போம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல் விடுத்துள்ளது.
3. ‘இந்திய அணியின் துருப்பு சீட்டாக ரிஷாப் பண்ட் இருப்பார்’ - பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர் நம்பிக்கை
இந்திய கிரிக்கெட் அணியின் துருப்பு சீட்டாக ரிஷாப் பண்ட் இருப்பார் என்று பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர் நம்பிக்கை தெரிவித்தார்.
4. ‘இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பீல்டிங் காரணம்’ - விராட்கோலி கருத்து
‘வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பீல்டிங் காரணம்’ என்று கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.
5. இந்திய அணியில் இருந்து ரிஷாப் பண்ட், கில் விடுவிப்பு
இந்திய அணியில் இருந்து ரிஷாப் பண்ட், கில் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.