கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்க அணியின் தோல்விக்கு காரணம் என்ன? கிறிஸ் மோரிஸ் வித்தியாசமான விளக்கம் + "||" + South African team What is the reason for failure

தென்ஆப்பிரிக்க அணியின் தோல்விக்கு காரணம் என்ன? கிறிஸ் மோரிஸ் வித்தியாசமான விளக்கம்

தென்ஆப்பிரிக்க அணியின் தோல்விக்கு காரணம் என்ன? கிறிஸ் மோரிஸ் வித்தியாசமான விளக்கம்
இந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி அடுத்தடுத்து 3 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்து துவண்டு போய் இருக்கிறது.
சவுதம்டன்,

தோல்விக்கான காரணம் என்ன? என்று தென்ஆப்பிரிக்க அணியின் ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ்சிடம் கேட்ட போது, ‘தோல்விக்கான காரணம் என்னவென்று தெரிந்து இருந்தால் நான் தென்ஆப்பிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து இருப்பேன். தொடர் தோல்வியால் அணி வீரர்கள் ஏமாற்றமும், சற்று கோபமும் அடைந்துள்ளனர். எங்களது பிரச்சினையை கண்டு பிடித்து சரி செய்து அடுத்த போட்டிக்கு தயாராகுவோம். அடுத்த ஆட்டத்தில் இருந்து எல்லாம் எளிது தான். எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெல்ல வேண்டும். கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை’ என்றார்.