ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் ஷாசத் காயத்தால் விலகல்


ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் ஷாசத் காயத்தால் விலகல்
x
தினத்தந்தி 7 Jun 2019 10:24 PM GMT (Updated: 7 Jun 2019 10:24 PM GMT)

ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் ஷாசத், காயம் காரணமாக விலகி உள்ளார்.

லண்டன்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்த விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மேனுமான முகமது ஷாசத் பயிற்சி ஆட்டத்தின் போது கால்முட்டியில் காயமடைந்தார். அதன் பிறகு ஆஸ்திரேலியா, இலங்கைக்கு எதிரான ஆட்டங்களில் ஆடிய போது காயத்தன்மை அதிகமாகி விட்டது. இதையடுத்து உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஷாசத் விலகியுள்ளார். ‘ஆப்கானிஸ்தான் டோனி’ என்று அழைக்கப்படும் 32 வயதான ஷாசத் 84 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 6 சதம் உள்பட 2,727 ரன்கள் எடுத்துள்ளார். அவருக்கு பதில் இக்ரம் அலி என்ற விக்கெட் கீப்பர் சேர்க்கப்பட்டுள்ளார்.

Next Story