கிரிக்கெட்

ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜம்பா பந்தை சேதப்படுத்தினாரா? - உலக கோப்பை கிரிக்கெட்டில் சர்ச்சை + "||" + Australian player Adam Jambah damaged the ball? - Controversy in World Cup cricket

ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜம்பா பந்தை சேதப்படுத்தினாரா? - உலக கோப்பை கிரிக்கெட்டில் சர்ச்சை

ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜம்பா பந்தை சேதப்படுத்தினாரா? - உலக கோப்பை கிரிக்கெட்டில் சர்ச்சை
உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜம்பா, பந்தை சேதப்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
லண்டன்,

உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா 6 ஓவர்களில் 50 ரன்களை வாரி வழங்கினார். விக்கெட் வீழ்த்தவில்லை. இந்த ஆட்டத்தின் போது ஜம்பாவின் சில நடவடிக்கைகள் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. ஒரு ஓவரில் பந்து வீசுவதற்கு முன்பாக அவர் தன்னுடைய பேண்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டு ஏதோ ஒன்றை எடுத்து பந்து மீது வைப்பது போன்று வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. சில முறை அவர் இது போல் செய்கிறார். இந்த சம்பவம் இப்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. பந்தின் தன்மையை மாற்றுவதற்காக உப்புத்தாளை கொண்டு தேய்த்தாரா? என்று சமூக வலைதளங்களில் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், பான்கிராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய பிரச்சினையில் சிக்கி தடையை அனுபவித்த நிலையில், ஆடம் ஜம்பாவின் செயல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.