கிரிக்கெட்

கனடா குளோபல் கிரிக்கெட் போட்டியில் ஆடுகிறார், யுவராஜ்சிங் + "||" + Yuvraj Singh plays Canada Global Cricket

கனடா குளோபல் கிரிக்கெட் போட்டியில் ஆடுகிறார், யுவராஜ்சிங்

கனடா குளோபல் கிரிக்கெட் போட்டியில் ஆடுகிறார், யுவராஜ்சிங்
சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய மூத்த வீரர் யுவராஜ்சிங், வெளிநாட்டு 20 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டிகளில் மட்டும் விளையாட விரும்புவதாக கூறியிருந்தார்.

மும்பை, 

சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய மூத்த வீரர் யுவராஜ்சிங், வெளிநாட்டு 20 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டிகளில் மட்டும் விளையாட விரும்புவதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் அவர் கனடாவில் நடக்கும் குளோபல் 20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த போட்டி அடுத்த மாதம் 26–ந்தேதி முதல் ஆகஸ்டு 11–ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 6 அணிகளில் ஒன்றான டொரோன்டோ நே‌ஷனல் அணிக்காக யுவராஜ்சிங் களம் இறங்க இருக்கிறார். கேன் வில்லியம்சன், காலின் முன்ரோ, பிரன்டன் மெக்கல்லம் (மூன்று பேரும் நியூசிலாந்து), ‌ஷகிப் அல்–ஹசன் (வங்காளதேசம்), பாப் டு பிளிஸ்சிஸ் (தென்ஆப்பிரிக்கா), சோயிப் மாலிக் (பாகிஸ்தான்), கிறிஸ் லின் (ஆஸ்திரேலியா), கிறிஸ் கெய்ல், ஆந்த்ரே ரஸ்செல், சுனில் நரின், வெய்ன் பிராவோ (4 பேரும் வெஸ்ட் இண்டீஸ்) உள்ளிட்டோரும் கனடா போட்டியில் விளையாட உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. டி.என்.பி.எல். கிரிக்கெட்: காரைக்குடி–கோவை அணிகள் இன்று மோதல் சென்னையில் நடக்கிறது
4–வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இந்த சீசனில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி உள்பட இரண்டு ஆட்டங்கள் மட்டுமே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
2. டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் வெற்றிப்பயணம் தொடருமா? காஞ்சி வீரன்சுடன் இன்று மோதல்
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் உத்வேகத்துடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இன்று காஞ்சி வீரன்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
3. உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ‘ஓவர்துரோ’ மூலம் வந்த பவுண்டரியை வேண்டாம் என்று சொல்லவில்லை பென் ஸ்டோக்ஸ் மறுப்பு
இங்கிலாந்தில் கடந்த மாதம் நடந்த 12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து–நியூசிலாந்து அணிகள் மோதின.
4. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடை பெற்றார் வேணுகோபால் ராவ்
இந்திய கிரிக்கெட் வீரர் வேணுகோபால் ராவ் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
5. எம்.எஸ்.டோனி கிரிக்கெட்டில் இருந்து நிரந்தர ஓய்வு இல்லை - 2 மாதமே ஓய்வு தகவல்
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் எம்.எஸ்.டோனி கலந்து கொள்ளவில்லை, இப்போது ஓய்வும் பெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.