ட்விட்டரில் தமிழக அளவில் டிரெண்ட்டாகும் “என்றும் தல டோனி”


ட்விட்டரில் தமிழக அளவில் டிரெண்ட்டாகும் “என்றும் தல டோனி”
x
தினத்தந்தி 2 July 2019 5:40 AM GMT (Updated: 2 July 2019 5:40 AM GMT)

போட்டியை பொறுத்தவரை டோனி தான் தோல்விக்கு முக்கிய காரணமா என்று பார்த்தால், அப்படி கூற முடியாது? இதற்கு முதலில் ஆடிய பேட்ஸ்மேன்களுமே காரணம் என்று கூறலாம்.

இங்கிலாந்தில் உலகக்கோப்பை தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் நடைபெறும் போட்டிகள் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியா- இங்கிலாந்து இடையிலான போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் டோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 31 பந்துகளுக்கு 42 ரன்கள் எடுத்தார். அவர் களத்தில் இருந்தாலும் இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சும் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

 இந்திய அணியின் புது ஜெர்ஸி சர்ச்சைக்குள்ளாகியது. இணையத்தில் அதனை சித்தரித்து மீம்ஸ்கள் குவிந்தன. ஆனால் அதைவிட டோனி அதிரடியாக விளையாடாததே தோல்விக்கு காரணம் என்ற கருத்து அதிகமாக எழுந்தது.

உலகக்கோப்பை தொடரின் நேற்று முன்தின போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதில் கடைசி  கட்டத்தில் டோனி அடித்து விளையாடததே தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது. கடைசி 5 ஓவரில் 12 ரன் ரேட் என்று இருக்கும்போது, டோனி மற்றும் கேதர் ஜாதவ் அடித்து ஆடாமல் ஓடியே ஓட்டம் எடுத்தனர் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். போட்டியை பொறுத்தவரை டோனி தான் தோல்விக்கு முக்கிய காரணமா என்று பார்த்தால், அப்படி கூற முடியாது? முதலில் ஆடிய பேட்ஸ்மேன்களுமே  காரணம் என்று கூறலாம்.

துவக்கத்தில் ராகுல் 9 பந்துகளை சந்தித்து ஓட்டம் எதுவுமே எடுக்காமல் அவுட்டானார். அப்போது முதலே, இந்தியா ஆமை வேக ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. பவர் பிளே இருந்தும், முதல் 10 ஓவர்களில், 30 ஓட்டங்களைக் கூட இந்தியா கடக்கவில்லை. ஹிட் மேன் ரோகித் ஷர்மாவும், விராட் கோஹ்லியும் மெல்ல மெல்லதான் ஷாட்டுகளை அடிக்க ஆரம்பித்தனரே தவிர, எல்லா ஓவர்களையும் அடித்து ஆடவில்லை இருவருமே சற்று வேகம் எடுக்க ஆரம்பித்தபோது, ஒருவர் பின் ஒருவராக நடையை கட்டிவிட்டனர். பாண்ட்யா வந்த வேகத்தில், துணிந்து சில அருமையான பவுண்டரிகளை விளாசினார். ஆனால் அவரும் பிறகு கட்டை போட்டார். இந்திய இன்னிங்சில் ஒரே ஒரு சிக்சர்தான் வந்தது. அது டோனி 50-வது ஓவரில் விளாசிய சிக்சர் மட்டுமே.

இருந்தாலும், கடைசி நேரத்தில்தான் ரசிகர்கள் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கும். அப்போதுதான் டோனி பவுண்டரிகள் அடிக்காமல், ஓடியே ரன் எடுத்தார் என்பதுதான் அவர் மீது ரசிகர்கள் அதிகம் கோபப்பட காரணமாக அமைந்துவிட்டது, ஆனால் நன்றாக ஆராய்ந்து பார்த்தால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அடித்து ஆட முற்பட்ட போது பெவிலியன் திரும்பி கொண்டே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதற்கு ரசிகர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் டோனிக்கு ஆதரவளிக்கும் வகையில் ட்விட்டரில் தகிழக அளவில் “என்றும் தல டோனி” என்ற ஹேஸ்டேக் பிரபலமாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் தொடக்கத்தில் இருந்தே நன்றாக ஆடாமல் கடைசியில் விளையாடிய தோனியை ஏன் குறை சொல்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

Next Story