கிரிக்கெட்

இங்கிலாந்து அணியிடம் இந்தியா வேண்டுமென்றே தோற்கவில்லைசர்ப்ராஸ் அகமது கருத்து + "||" + India did not deliberately defeat the England team Sarfraz Ahmed Comment

இங்கிலாந்து அணியிடம் இந்தியா வேண்டுமென்றே தோற்கவில்லைசர்ப்ராஸ் அகமது கருத்து

இங்கிலாந்து அணியிடம் இந்தியா வேண்டுமென்றே தோற்கவில்லைசர்ப்ராஸ் அகமது கருத்து
இங்கிலாந்து அணியிடம் இந்தியா வேண்டுமென்றே தோற்கவில்லை என சர்ப்ராஸ் அகமது கருத்து தெரிவித்துள்ளார்.
கராச்சி, 

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடந்த ஜூன் 30-ந் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது. பாகிஸ்தான் அணியின் அரைஇறுதி வாய்ப்பை சிதைக்கும் வகையில் இந்திய அணி வேண்டுமென்றே இந்த ஆட்டத்தில் தோற்றதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் கருத்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இது குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவிடம் கேட்ட போது, ‘நாங்கள் அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்கக்கூடாது என்பதற்காக இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோற்றதாக நான் நினைக்கவில்லை. அப்படி சொல்வது சரியானது அல்ல. இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது’ என்று தெரிவித்தார்.