கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் : அரையிறுதி நடக்க உள்ள மான்செஸ்டரில் மழைக்கான சூழல் நிலவுகிறது + "||" + ICC World Cup 2019: India, New Zealand battle for a shot at World Cup final

உலக கோப்பை கிரிக்கெட் : அரையிறுதி நடக்க உள்ள மான்செஸ்டரில் மழைக்கான சூழல் நிலவுகிறது

உலக கோப்பை கிரிக்கெட் : அரையிறுதி நடக்க உள்ள மான்செஸ்டரில் மழைக்கான சூழல் நிலவுகிறது
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - நியூசிலாந்து மோதும் அரையிறுதி நடக்க உள்ள மான்செஸ்டரில் மழைக்கான சூழல் நிலவுகிறது.
சென்னை,

2019 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி இன்று  மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறுகிறது.  

இன்று நடைபெறும் போட்டியில் 50 சதவீதம் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், இன்று மழை காரணமாக போட்டி நடைபெறவில்லை என்றால், நாளை  புதன்கிழமை நடைபெறும். ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. நாளையும் மழை காரணமாக போட்டி நடைபெறவில்லை என்றால், என்ன நடக்கும்?

அந்த நேரத்தில் லீக் சுற்றில் இரு அணிகளின் செயல்திறனை அடிப்படையில் (புள்ளி பட்டியல்) இறுதிச்சுற்றுக்கு செல்லும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர். இதுவரை, இந்தியா 8 போட்டிகளில் விளையாடி 15 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தில் உள்ளது. 

மறுபுறம், நியூசிலாந்து 11 புள்ளிகளை பெற்றுள்ளது. மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்படுகிறது. நியூசிலாந்து மட்டும் வெளியேற வேண்டிய சூழல் நேரிடும். மழை காரணமாக போட்டி நிறுத்தப்படும் என்றால், பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் இந்தியா எளிதாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இந்தியா - நியூசிலாந்து போட்டி தொடங்க உள்ளது. ஆனால் மான்செஸ்டரில் மேகங்கள் சூழ்ந்து மழைக்கான அறிகுறி தொடங்கி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மீது தாக்குதல் அச்சுறுத்தல் இ-மெயிலால் பரபரப்பு ; பாதுகாப்பு அதிகரிப்பு
தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக மேற்கிந்திய தீவுகளில் உள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
2. ஆடை இல்லா விக்கெட் கீப்பிங் : பிரபல கிரிக்கெட் வீராங்கனை வெளியிட்ட புகைப்படம்
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட்டின் பிரபல வீராங்கனை சாரா டெய்லர் வெளியிட்ட ஆடை இல்லா புகைப்படம் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
3. கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக விளையாடிய முழுநேர மாற்று வீரர்!
கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக போட்டியின் நடுவே இடம்பிடித்த முழுநேர மாற்று வீரர்!
4. முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலைக்கு காரணம் என்ன? - பரபரப்பு தகவல்கள்
கடன் பிரச்சினையால் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5. இந்திய அணியை தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை -டேல் ஸ்டெயின் கிண்டல்
இந்திய அணியை தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அதற்கு கோலியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் டேல் ஸ்டெயின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.