கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணி தோல்வி குறித்து பாகிஸ்தான் ரசிகர்கள் மீம்ஸ் + "||" + Pakistani tweeps share memes after Indian cricket team loses

இந்திய கிரிக்கெட் அணி தோல்வி குறித்து பாகிஸ்தான் ரசிகர்கள் மீம்ஸ்

இந்திய கிரிக்கெட் அணி தோல்வி குறித்து பாகிஸ்தான் ரசிகர்கள் மீம்ஸ்
இந்திய கிரிக்கெட் அணியின் தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கொண்டாடினர்.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது. இதனால் கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்  வேதனை அடைந்தனர்.

ஆனால் இந்தியாவின் தோல்வியை  பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் விரைவாக மீம்ஸ்களைப் பகிர்ந்து  கொண்டாடினர்.

இருப்பினும்,  குறிப்பாக பாகிஸ்தானியர்கள் அவர்களின் நகைச்சுவை உணர்வை ஆக்கப்பூர்வமான மீம்ஸூடன் பயன்படுத்தினர்.

ட்விட்டர் பயனர் @HaayeShabbir, போட்டியைப் பார்க்கும் போது பாகிஸ்தானியர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்று தான் நினைத்ததை காட்டும் ஒரு படத்தைப் பகிர்ந்து கொண்டு எழுதினார்.  “பாகிஸ்தானியர்கள் போட்டியைப் பார்க்கிறார்கள்: ...

அதேசமயம், @ DrAamirIrshad1 பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது போட்டியை ரசிப்பதாக பகிர்ந்துள்ளார்: “சர்ப்ராஸ் அகமது இப்போதே ...”


இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவின் மீம்ஸ் வைரலாகியது. இது அவரது 2018 திரைப்படமான சுய் தாகாவின் அவரது கதாபாத்திரத்தை உள்ளடக்கியது.
DrNabeelChaudry, என்பவர் 2004 ஆம் ஆண்டு பாலிவுட் திரைப்படமான மெயின் ஹூன் நாவின் ஒரு காட்சியுடன் ஒரு வீடியோவைப் பகிர்ந்து எழுதி உள்ளார். “குட் பை உலகக் கோப்பை 2019 இந்தியாவிடம் இருந்து…”