கிரிக்கெட்

ரோகித் சர்மா வேதனை 30 நிமிட மோசமான ஆட்டத்தால் உலக கோப்பை வாய்ப்பை இழந்தோம் + "||" + Rohit Sharma torments 30 minutes of bad play We missed the World Cup opportunity

ரோகித் சர்மா வேதனை 30 நிமிட மோசமான ஆட்டத்தால் உலக கோப்பை வாய்ப்பை இழந்தோம்

ரோகித் சர்மா வேதனை 30 நிமிட மோசமான ஆட்டத்தால் உலக கோப்பை வாய்ப்பை இழந்தோம்
இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் மான்செஸ்டரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி 18 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வி கண்டு வெளியேறியது.

மான்செஸ்டர், 

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் மான்செஸ்டரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி 18 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வி கண்டு வெளியேறியது. இந்த நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித்சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில், ‘நாங்கள் ஒரு அணியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி விட்டோம். 30 நிமிட மோசமான ஆட்டத்தால் எங்களது உலக கோப்பை வாய்ப்பு பறிபோனது. இதனால் எனது இதயம் மிகவும் கனமாகி விட்டது. இதேபோல் தான் உங்களது இதயமும் ஆகியிருக்கும் என்று எனக்கு உறுதியாக தெரியும். வெளிநாட்டில் இந்திய அணிக்கு கிடைத்த ஆதரவு அற்புதமானது. நாங்கள் எந்த மைதானத்தில் ஆடினாலும் அங்கு நீல நிறத்தில் வண்ணம் தீட்டியபடி குவிந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.