கிரிக்கெட்

கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணி போராடி தோல்வி + "||" + Cricket: Indian A team struggles lose against West Indies A

கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணி போராடி தோல்வி

கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணி போராடி தோல்வி
அதிகாரபூர்வமற்ற 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய ஏ அணி போராடி தோல்வி அடைந்தது.
ஆன்டிகுவா,

ஆன்டிகுவாவில் நேற்று முன்தினம் நடந்த வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய ஏ அணி 5 ரன் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது. இதில் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி நிர்ணயித்த 299 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய ஏ அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 293 ரன்களே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக அக்‌ஷர் பட்டேல் 81 ரன்களும், வாஷிங்டன் சுந்தர், குருணல் பாண்ட்யா தலா 45 ரன்களும் எடுத்தனர். தோல்வி அடைந்தாலும் இந்திய அணி 5 போட்டி கொண்ட இந்த தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.