கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட இந்திய அணி இன்று அமெரிக்கா பயணம் + "||" + The Indian team will travel to America today to play in the West Indies series

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட இந்திய அணி இன்று அமெரிக்கா பயணம்

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட இந்திய அணி இன்று அமெரிக்கா பயணம்
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி இன்று அமெரிக்காவுக்கு புறப்படுகிறது.
மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர், மூன்று ஒரு நாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் இரண்டு 20 ஓவர் ஆட்டங்கள் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில்லில் வருகிற 3 மற்றும் 4-ந்தேதி நடக்கிறது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவதற்காக இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது. 3-வது 20 ஓவர் போட்டியில் இருந்து எஞ்சிய ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும்.


இதையொட்டி விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்றிரவு மும்பையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்கிறது.

வழக்கமாக வெளிநாட்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்க கிளம்புவதற்கு முன்பாக கேப்டனும், பயிற்சியாளரும் செய்தியாளர்களை சந்தித்து தொடர் குறித்து பேட்டி அளிப்பது வழக்கம். ஆனால் ஆச்சரியம் அளிக்கும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு புறப்படுவதற்கு முன்பாக பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை. ‘வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு இந்திய அணி புறப்படுவதற்கான நிகழ்ச்சிகளில் பத்திரிகையாளர் சந்திப்பு எதுவும் இடம் பெறவில்லை. ஆனாலும் அதற்கு ஏற்பாடு செய்ய முயற்சித்தோம். முடியாமல் போய் விட்டது’ என்று கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

சமீப காலமாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், துணை கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவின் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்வதை ரோகித் சர்மா நிறுத்திக் கொண்டதும் அது தான் காரணம் என்று கூறப்படுகிறது.

செய்தியாளர் சந்திப்பு நடந்தால் ரோகித் சர்மாவுடனான பனிப்போர் குறித்து தான் சரமாரி கேள்விகள் கேட்கப்படும். அதனால் கோலி கோபமடையக்கூட வாய்ப்பு உள்ளது. இதனால் தான் கோலி செய்தியாளர் சந்திப்பை தவிர்த்து விட்டதாக சொல்லப்படுகிறது.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் ஆடும் இந்திய அணி வருமாறு:-

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பண்ட் (விக்கெட் கீப்பர்), குருணல் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், புவனேஷ்வர்குமார், கலீல் அகமது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி.


தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக சோனியா காந்தியுடன் இன்று சரத்பவார் சந்திப்பு
மராட்டியத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக சோனியா காந்தியுடன் இன்று சரத்பவார் சந்தித்து பேசுகிறார்.
2. பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
3. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை - பிற்பகலில் முடிவு தெரிந்துவிடும்
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று (வியாழக்கிழமை) எண்ணப்படுகின்றது. இந்த தொகுதிகளை கைப்பற்ற போவது யார்? என்பது பிற்பகலில் தெரிந்துவிடும்.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் கேரளா-கொல்கத்தா மோதல்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி இன்று தொடங்க உள்ளது. முதல் ஆட்டத்தில் கேரளா-கொல்கத்தா அணிகள் மோத உள்ளன.
5. தேசிய ஓபன் தடகளம்: ராஞ்சியில் இன்று தொடக்கம்
தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ராஞ்சியில் இன்று தொடங்க உள்ளன.