டி.என்.பி.எல். கிரிக்கெட் : கோவை கிங்ஸ் 154 ரன்கள் சேர்ப்பு


டி.என்.பி.எல். கிரிக்கெட் : கோவை கிங்ஸ் 154 ரன்கள் சேர்ப்பு
x
தினத்தந்தி 4 Aug 2019 4:02 PM GMT (Updated: 4 Aug 2019 4:02 PM GMT)

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கோவை கிங்ஸ் அணி காரைக்குடி காளை அணிக்கு 155 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

சென்னை,

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் காரைக்குடி காளை மற்றும் கோவை கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான 22-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து கோவை கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக  ஷாருக்கான் மற்றும் அபினவ் முகுந்த் களமிறங்கினர். இருவரும் இணைந்து அணிக்கு வலுவான தொடக்கத்தை அமைத்தனர். இதில் அபினவ் முகுந்த் 32 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

அடுத்த வந்த முகமது அட்னன் கான் 2 ரன்னிலும், அகில் ஸ்ரீநாத் 12 ரன்னிலும், ஆட்டமிழக்க, மறுமுனையில் பொறுப்பாக ஆடி அரைசதம் அடித்த ஷாருக்கான் 59 ரன்களில் கேட்ச் ஆனார். அதற்கு பின் அந்தோணி தாஸ் 9 ரன்னிலும், பிரதோஷ் ரஞ்சன் பால் 18 ரன்னிலும், கே.விக்னேஷ் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை எடுத்துள்ளது. கடைசியில் மலோலன் ரங்கராஜன் 11 ரன்னுடம், அஜித் ராம் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

காரைக்குடி காளை அணியில் ராஜ்குமார் 2 விக்கெட்டுகளும், சுனில் சாம், ஷாஜகான், சுவாமி நாதன், அஸ்வின் குமார், ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காரைக்குடி காளை அணி களமிறங்க உள்ளது.

Next Story